செய்திச் சுருக்கம்

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மாணவர்களுக்கு இலவச பேருந்து
பயண அட்டை வழங்கியதில் சாதனை

தமிழ்நாட்டில் 1 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஏழை எளிய மாணவர்கள் பயனடைகின்றனர். இந்த பயண அட்டை விநியோக தாமதத்தை தவிர்க்க 2024-2025 கல்வியாண்டில் எமிஸ் தளத்தில் உள்ள மாணவர் தரவுகளை தொகுத்து 25 சதவீதம் கூடுதலாக இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டன.

முதன்மை தேர்வு பயிற்சி வகுப்புகள்

தழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் 2026 பிப்,. 8, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்காக, ஜனவரி 5 முதல் பிப். 6ஆம் தேதி வரை கிண்டியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யத்தில் மாதிரித் தேர்வுகள் மற்றும் திருப்புதல் (ரிவிஷன்) வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. இந்த வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் https://forms.gle/d8jkebkrgxaze14k7 என்ற இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

நிமிசுலைட் கலந்த மாத்திரைக்கு தடை

வலி நிவாரணி, காய்ச்சல், அழற்சி எதிர்ப்பு போன்றவற்றுக்கு நிமிசுலைட் பயன்படுத்தப்படுகிறது. இது மாத்திரை, கேப்சூல், சிரப் என 3 வகைகளில் உள்ளன. ஆனால், இந்த மாத்திரைகளில் 100 மி.கி. மேல் நிமிசுலைட் வேதிப் பொருள் கலந்திருப்பதால் மக்களுக்கு பல்வேறு பின் விளைவுகள் ஏற்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து நிமிசுலைட் கலந்த மாத்திரைக்கு ஒன்றிய சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது. பொது நலன் கருதி இந்த மாத்திரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இனிமேல் இந்த மருந்துகளை தயாரிக்கவும், விற்கவும், விநியோகம் செய்யவும் உடனடியாக தடை விதிக்கப்படுகிறது என்று ஒன்றிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இணையவழித் தளங்களுக்கு எச்சரிக்கை

ஒன்றிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் கடந்த டிசம்பர் 29ஆம் தேதியிட்ட ஆலோசனை குறிப்பில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79இன் கீழ் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இணையவழித் தளங்கள் பயனர்கள் பதிவேற்றும் மூன்றாம் தரப்பு தகவல்களுக்கு பொறுப்பேற்க மாட்டார்கள். இந்த பாதுகாப்பு கிடைக்க இணையவழித் தளங்கள், சட்ட விரோத தகவல் பற்றி தெரிந்தவுடன் அதை நீக்கி உரிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன்படி சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இணையவழித் தளங்கள் தங்கள் இணக்க கட்டமைப்பை உடனடியாக மறு ஆய்வு செய்து, தங்கள் தளங்களில் உள்ள ஆபாசமான மற்றும் சட்ட விரோத உள்ளடக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் செய்யத் தவறினால் வழக்கு தொடர்தல் உள்ளிட்ட சட்டரீதியான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

காசநோயால் 90,421 பேர் பாதிப்பு

நிகழ் ஆண்டில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந்தோரின் தரவுகளை ஆய்வு செய்தபோது நாடு முழுவதும் 25.64 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அந்த நோயின் தாக்கம் இருந்தது தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே உத்தரபிரதேசம், மகாராட்டிரம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில்தான் காசநோய் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதன் நீட்சியாகவே தற்போதைய புள்ளி விவரங்களும் அமைந்துள்ளன. குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் மட்டும் 6.79 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் எடுத்துக் கொண்டால் 90,421 பேருக்கு அந்நோயின் பாதிப்பு இருந்தது. அவர்களில் தனியார் மத்துவமனைகளில் கடந்த ஆண்டில் தமிழ்நாட்டில் 92,485 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *