சென்னை மருத்துவமனையில் இரண்டு பெண்களுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன
சென்னை, ஜன. 02- உலகம் முழுவதும் 2026ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஆண்டின் முதல் நாளில் பிறப்பவர்கள் தங்களது பிறந்தநாளையும், புத்தாண்டையும் ஒரே நாளில் கொண்டாடும் இரட்டிப்பு மகிழ்ச்சியைப் பெறுவார்கள். அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் நேற்று (ஜனவரி 1) மட்டும் சுமார் 545 குழந்தைகள் பிறந்துள்ளன.
இரட்டை பெண் குழந்தைகள்
மாவட்ட வாரியான பிறப்பு விவரங்கள்:புத்தாண்டு நள்ளிரவு 12 மணி முதல் மாலை வரையிலான புள்ளிவிவரங்களின்படி, பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் பிறந்துள்ள விவரம் பின்வருமாறு:
சென்னை 46 கள்ளக்குறிச்சி 47 சேலம் 29 விழுப்புரம் 27 நெல்லை24 திருவண்ணாமலை 22 மதுரை 22 – தஞ்சை 22 செங்கல்பட்டு 20 திண்டுக்கல் 20 தென்காசி 20
சிறப்புத் தகவல்
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனையில் மட்டும் 21 குழந்தைகள் பிறந்தன. இதில் இரண்டு தாய்மார்களுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
மயிலாடுதுறையில் 16 குழந்தைகள்
கோவையில் 11, திருப்பூரில் 13, ஈரோட்டில் 12, கிருஷ்ணகிரியில் 15, தருமபுரியில் 13 மற்றும் நாமக்கல்லில் 10 குழந்தைகள் பிறந்துள்ளன. டெல்டா மாவட்டங்கள்: மயிலாடுதுறையில் 16, நாகையில் 6 மற்றும் திருவாரூரில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன.
இதர மாவட்டங்கள்:
திருச்சியில் 13, வேலூரில் 8, கரூரில் 4 (அனைத்தும் ஆண் குழந்தைகள்), புதுக்கோட்டையில் 14 மற்றும் கடலூரில் 13 குழந்தைகள் பிறந்துள்ளன. தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிறந்த இந்த மழலைகளின் வருகையால், அந்தந்தக் குடும்பத்தினர் புத்தாண்டை மிகுந்த மகிழ்ச்சியுடன் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
