இலால்குடி கழக மாவட்ட துணைத் தலைவர் மு.திருநாவுக்கரசுவின் தாயார் மு.நல்லம்மாள் (வயது 93) நேற்று (1.1.2025) இரவு மறைவுற்றார். இலால்குடி கழக மாவட்டம் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் இலால்குடி மாவட்ட தலைவர் முனைவர் வீ. அன்புராஜா, புள்ளம்பாடி ஒன்றிய செயலாளர் கவிஞர் பொற்செழியன், இலால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் மு. செல்வி, மாவட்ட மாணவர் கழக தலைவர் செ. அ. அவனிகோ இளந்திரையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், மாவட்ட காப்பாளர்கள் தே. வால்டேர்,
ப. ஆல்பர்ட், மாவட்ட செயலாளர் அங்கமுத்து, மாவட்ட துணை செயலாளர்கள், சித்தார்தன், ஆசைத்தம்பி, மாவட்ட இளைஞரணி தலைவர் இசைவாணன், மாவட்ட செயலாளர் பனிமலர் செல்வன், துணைத் தலைவர் வான்முடி வள்ளல் உட்பட பலர் (தொலைப் பேசியில்) இரங்கல் தெரிவித்தனர்.
