பிரதமர் நரேந்திர மோடியின், 2025 ஆம் ஆண்டின் சுதந்திர தின உரையில், புதிய இந்தியாவை மறு வடிவமைத்து வருவதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு குறித்து பெருமைபடப் பேசினார்.
மோடி அவர்களின் 11 ஆண்டு கால பதவியில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் எனப்படும் தீவிர வலதுசாரி ஹிந்துத்துவ அமைப்பிற்கு வெளிப்ப டையாக அவர் ஆதரவு அளித்தார். இந்த அமைப்பு, மோடியின் இளமைக் காலத்திலிருந்தே அவரது தனிப்பட்ட வாழ்க்கையை வடிவமைத்தது.
இந்த ஆண்டு அதன் 100 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், இந்த அமைப்பு எத்துணைப் பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது என்பதன் பிரதிபலிப்பே இந்த அங்கீகாரம்.
ஆர்.எஸ்.எஸ்.சின்
நினைப்பு என்ன?
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, இந்தியாவில் முஸ்லிம் படையெடுப்புகள் மற்றும் காலனித்துவ ஆட்சியின் நீண்ட வரலாற்றுக்குப் பிறகு ஹிந்துப் பெருமையை மீட்டெடுக்கும் அமைப்பாக தன்னை நினைத்துக் கொள்கிறது
அதன் ஆரம்பகால தலைவர்கள், 1930–களிலும் 1940–களிலும் கொடுங்கோலர்களின் பாசிச சித்தாந்தத்தைத் தங்களின் கொள்கையாகக் கொண்டு வெளிப்படையாகவே உத்வேகம் பெற்றனர்.
காந்தியாரின் படுகொலையில் தொடர்புடையது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால் பலமுறை தடை செய்யப்பட்ட போதிலும், அது தப்பிப் பிழைத்து வலதுசாரி அமைப்பாக வளர்ந்தது.
ஆர்.எஸ்.எஸ். இந்தியாவின் நிறுவ னங்களை இவ்வளவு ஆழமாக ஊடுருவி கையகப்படுத்தி யுள்ளதால், மோடிக்குப் பிறகும், அதன் ஆழமான வேர்கள் இதை நீண்டகால வலுவான சக்தியாகத் தக்கவைக்கும். இது இந்திய சமூகம், அரசாங்கம், நீதிமன்றங்கள், காவல்துறை, ஊடகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குள் பரந்து விரிந்த இணை அமைப்புகளின் வழியாகச் செல்கிறது.
ஆர்.எஸ்.எஸ். தனது ரகசியத் தன்மையை வளர்த்துக் கொண்டிருந்தாலும், சமீப ஆண்டுகளில் பெருமையுடன் மிகவும் பகிரங்கமாகத் திகழ்கிறது. அதன் உறுப்பினர்களும் அதன் செல்வாக்கும் எங்கும் பரவியுள்ளன.
செயலில் ஆர்.எஸ்.எஸ்.சின்
அரசியல் இயந்திரம்!
மோடி பாரதிய ஜனதா கட்சி முக்கிய தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கும்போது, ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் இயந்திரம் செயல்படுவதையே பார்க்கிறோம்; ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் வேட்பா ளர்களின் நடவடிக்கையை வடிவமைக்கிறது.
அதேபோல், சில்லரை ஹிந்துக் குழுக்களை உருவாக்கி, முஸ்லிம் பகுதிகளில் அணிவகுப்பு நடத்துவதையோ அல்லது கிறிஸ்தவக் கோயில்களைத் தாக்குவதையோ பார்க்கும்போது, ஆர்.எஸ்.எஸ். இணை அமைப்புகள் தங்களின் பலத்தை வெளிப்படையாகக் காட்டுவதைக் காணலாம்
கலாச்சார மற்றும் மத ரீதியான மாற்றங்கள்
முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வெறுப்புப் பேச்சுகள் மற்றும் வன் முறைச் சம்பவங்கள் கவலைக்குரியதாகவே உள்ளன.
பாடப்புத்தகங்களில் உண்மை வரலாறு மறைக்கப்பட்டு, மூடநம்பிக்கைகள் மற்றும் வாய்மொழிக் கதைகளின் பெருமைகள் முன்னி லைப்படுத்தப்படுவதை ஒரு திட்டமிட்ட ‘கலாச்சார மாற்றமாக’ வடிவமைக்கிறது.
அரசியல் மேலாதிக்கம்
2024 தேர்தலுக்குப் பிறகு, ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடி இடையிலான உறவில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், இறுதியில் ஆர்.எஸ்.எஸ்.சின் நீண்டகாலத் திட்டமான ‘ஹிந்து ராஷ்டிரா’வை நோக்கி நாடு நகர்வதை வெளிப்படையாகவே பேசத்துவங்கி உள்ளது.
அயோத்தி ராம ஜென்ம பூமி கோயில் திறப்பு போன்ற நிகழ்வுகள் இந்த நகர்வின் உச்சகட்டமாகப் பார்க்கப்படுகிறது.
பன்னாட்டுப் பார்வை மற்றும் ஜனநாயகம்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று அழைக்கப்படும் இந்தியா, தற்போது ‘தேர்தல் சார்ந்த எதேச்சதிகாரம்’நோக்கிச் செல்வதாகச் பன்னாட்டு அமைப்புகள் விமர்சிக்கின்றன.
ஊடக சுதந்திரம் காணாமல் அடிக்கப்பட்டு எதிர்க்கட்சிகள் பலவீனப்படுத்தப்படுவதும் இந்தி யாவின் எதிர்கால ஜனநாயகம் குறித்த அச்சத்தை ஏற்படுத்த்தி வருகிறது.
இந்தியா ஒரு வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக இருந்தாலும், அதன் உள்நாட்டுச் சமூக அமைதி சிதைக்கப்படுவது உலக நாடுகளுக்கு ஓர் எச்சரிக்கை மணியாகும். ஹிந்து வலதுசாரி அமைப்புகளின் பிடியில் இந்தியா சிக்கியுள்ளது இதுதான் புதிய இந்தியாவின் மறுமலர்ச்சியா?
இவ்வாறு ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் (29.12.2025) முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டுள்ளது.குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பக் கட்டணம், சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜனவரி 2 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 766 விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுக் கட்டணம் செலுத்தாததால் ஜனவரி 2 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 113 மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழை பதிவேற்றம் செய்யவும் அவகாசம் என டி.என்.பி.எஸ்.சி. தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்கள் தேர்வுக் கட்டணம், உரிய சான்றிதழை பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
