பாரதிய ஜனதா தலைமையிலான கருநாடக அரசு கடந்த ஆண்டு வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவதற்குத் தடை விதித்தது. அப்போது, மாணவி தபசும் ஷேக் கல்விக்கு முன் னுரிமை அளிப்பதா? அல்லது பாரம்பரிய மதநம்பிக்கையைத் தொடர்வதா? என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார். இது குறித்து தபசும் ஷேக், “நான் ஹிஜாபை கல்லூரிக்கு வெளியே விட்டு விட்டு என் கல்வியைத் தொடர முடிவு செய்தேன். கல்விக்காக நாங்கள் சில தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும்” என்றார். இவர், பெங்களூருவில் உள்ள நாகரத்னம்மா மேதா கஸ்தூரிரங்க செட்டி ராஷ்ட்ரீயா வித்யாலயா (என்எம்கே ஆர்வி) மகளிர் கல்லூரியில் பயில்கிறார்.
ஒரு ஆண்டு கழித்து, அப்பெண்ணின் முடிவு பலனளித்தது, கருநாடகப் பல்கலைக்கழகக் கல்வித் துறையால் நடத்தப்பட்ட றிஹிசி தேர்வில் (12 ஆம் வகுப்பு வாரியத்தேர்வுக்கு சமம்) முதல் மதிப்பெண் பெற்றார். இந்த ஆண்டு கலைப் பிரிவில் 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்று ஹிந்தி, உளவியல், சமூகவியல் ஆகிய பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இந்நிலையில், கருநாடகா முழுவதும் றிஹிசி வகுப்புகளில் ஹிஜாப் தடைக்கு எதிர்ப்புகள் ஏற்பட்டபோது நிலவிய குழப்பத்தை நினைவுகூர்ந்த தபசும், அதுவரை வகுப்பில் எப்போதும் ஹிஜாப் அணிந் திருந்ததால், தனது கல்வியில் அதன் தாக்கம் குறித்து கவலைப்படுவதாகக் கூறினார்.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் உடுப்பியில் உள்ள றிஹிசி படிக்கும் 6 மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று கூறியதை அடுத்து ஹிஜாப் சர்ச்சை வெடித்தது. இது மற்ற மாவட்டங்களுக்கும் பரவி போராட்டங்களுக்கு வழிவகுத்தது, அதைத் தொடர்ந்து பியுசி (11, 12 வகுப்புகள்) மற்றும் பட்டயக் கல்லூரிகளில் மாணவர்கள் பரிந்துரைக்கப்பட்ட சீருடைகளை அணியுமாறு மாநில அரசு பரிந்துரைத்தது. மேலும், பெரும்பாலான அரசு மற்றும் தனியார்க் கல்லூரிகளில், ஹிஜாப் சீருடை இல்லை. இது குறித்து தபசும், “இது என்னைப் பாதித்தது. நான் கவலைப் பட்டேன்,” என்று கூறினார்.
அவரது நண்பர்கள் சிலர் ஹிஜாப் அணிய அனுமதித்த பிற கல்லூரிகளுக்குச் சென்றதாகவும், மேலும் சிலர் தாங்கள் படித்து வந்த பல்கலைக்கழகக் கல்லூரி அரசாங்க உத்தரவை அமல்படுத்திய பிறகு திறந்தநிலைப் பள்ளிக்கு மாறியதாகவும் – அவர் கூறினார். தொடர்ந்து, “கல்விக்கும் ஹிஜாபிற்கும் இடையில் நான் கல்வியைத் தேர்ந்தெடுத்தேன். பெரிய விடயங்களைச் செய்ய சில தியாகங்களைச் செய்ய வேண்டும்” என்றார். மேலும் அவரது பெற்றோர் அளித்த ஆதரவையும், ஊக் கத்தையும் அவர் நினைவு கூர்ந்தார். அரசு உத்தரவு அமல் படுத்தப்பட்டபோது, நான் மிகவும் தெளிவாக இருந்தேன். அப்போது என் தந்தை, “நாட்டின் சட்டத்தை பின்பற்றுவோம். குழந்தைகளுக்கு கல்வி முக்கியம்” எனக் கூறியதையும் தபசும் ஷேக் சுட்டிக் காட்டினார்.
தொடர்ந்து, மாநில அரசின் உத்தரவுக்குப் பிறகு, கல்லூரிக்குச் செல்லும் வழியில் ஹிஜாப் அணிந்திருந்தபோதும், வளாகத்திற்குள் நுழையும்போது விதியைப் பின்பற்றியதாக தபசும் கூறினார். இதுபற்றி அவர், “எனது கல்லூரியில் வகுப்பு களுக்குச் செல்வதற்கு முன்பு அதை (ஹிஜாப்) அகற்றுவதற்கு ஒரு தனி அறை உள்ளது” என்றார். கோவிட் பெருந்தொற்றின் போதும் ஆசிரியர்களின் ஆதரவு இருந்தது என்று கூறிய தபசும், “எங்கள் விரிவுரையாளர்கள் ஊக்க மளித்தனர். 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறுவேன் என்று எதிர் பார்த்தேன், ஆனால் முதலிடம் பெறுவோம் என்று கனவு காணவில்லை. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது” என்றார்.
தொடர்ந்து தாம் உளவியல் மருத்துவராக விரும்புவதாகவும் தபசும் தெரிவித்தார். தற்போது தபசும் பெங்களூருவில் உள்ள ஆர்.வி. பல்கலைக்கழகத்தில் இளங்கலை தாராளவாத கலைத் திட்டத்தில் சேர திட்டமிட்டுள்ளார். பொறியியல் பட்டதாரியான இவரது மூத்த சகோதரர் தற்போது எம்டெக் படித்து வருகிறார். ஹிஜாப் தடை என்பது மாநிலம் முழுவதும் பியுசிகளில் பரீட்சை தேர்ச்சியையோ அல்லது ஒட்டுமொத்த பெண்களின் சேர்க் கையையோ பாதிக்கவில்லை என்றாலும், உடுப்பி மாவட்டத்தில் ஹிந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டன. இது 2021-2022 இல் 388 ஆக இருந்தது. இவற்றில், 91 முஸ்லிம் பெண்கள் அரசு கல்வி நிறுவனங்களில் பியுசிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர், இது 2021-2022 இல் 178 ஆக இருந்தது, அதே நேரத்தில் முஸ்லிம் சிறுவர்களின் சேர்க்கை 210 இலிருந்து 95 ஆக குறைந்துள்ளது.
கருநாடக பிஜேபி அரசு ஹிஜாப் அணியக் கூடாது என்று சொன்னது எல்லாம் முற்போக்கான சிந்தனையினாலல்ல; மாறாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற ஹிந்துத்துவா நோக்கில் தான் அதனைச் செய்தனர். அதையும் சமாளித்து புத்திசாலித் தனமாக நடந்து கொண்ட தபசுமின் சிந்தனையும், செயல்பாடும் பெற்றோர்களின் அரவணைப்பும் போற்றத் தக்கதே!