இதற்காக நீங்கள் கொடுக்கவேண்டிய விலை அதிகமாக இருக்கும்! 2026 இல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பாடம் கற்பிக்கும்!!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருப்பரங்குன்றம் பிரச்சினை: தமிழர்களைப் பார்த்து, ஒன்றிய கல்வி அமைச்சர்  ‘முட்டாள்கள்’ என்பதா?

 அன்று, பிரதமர் மோடி தமிழர்களைத் ‘திருடர்கள்’ என்றார்!

பேசுங்கள், இதைப்போல தொடர்ந்து பேசுங்கள்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

திருப்பரங்குன்றம் ‘தீபம் பிரச்சினை’ையத் திசை திருப்பி, தமிழர்களை முட்டாள்கள் என்றும், திருடர்கள் என்றும் வசைபாடும் வடநாட்டுத் தலைவர்களுக்கு, வரும் தேர்தலில் தக்க பாடம் கற்பிப்பார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்திலும் பெருந்தோல்வி கண்டு, முகத்தில் கரி பூசிக்கொண்ட பா.ஜ.க. ஒன்றிய அமைச்சர்கள் அல்லது சில தலைவர்கள் என்பவர்கள் அதி கார மமதையின் காரணமாகவோ அல்லது அறியாமையின் உச்சத்தினாலோ பொறுப்பற்ற முறையில், சற்றும் நாவடக்கம் இன்றி – தமிழ்நாட்டிற்கு வந்து, பேசி வருகிறார்கள் என்பது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.

மதுரைக்கு வந்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் என்பவர்,

‘‘தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடுப்போர் முட்டாள்கள்’’ என்று சற்றும் பொறுப்பற்ற முறை யிலும், பண்பற்ற தன்மையிலும் பேசியிருப்பது எவ்வளவு வன்மம் நிறைந்த ஒன்று!

எதிர்விளைவை உண்டாக்கும் பேச்சுகள்!

இவர்களுக்கும், இவர்களுடன் அடிமை முறிச் சாசனம் எழுதிக் கொடுத்து, மிரட்டலுக்கு அஞ்சியுள்ள அ.தி.மு.க உள்பட சில கட்சியினரும் (இன்னமும் அங்கே இந்த இரண்டு கட்சிகள் தவிர, தேசிய ஜனநாயக கூட்டணி என்ற அவர்களது கூட்டணியில் முன்பு இருந்த பல கட்சிகளுக்கு, சேர பலமுறை அழைப்பு விடுத்தும் ஏமாற்றம் அடைந்த நிலையில்) இப்படி தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசுவது, தமிழ்நாட்டு மக்களின் மனோபாவம் தெரியாத, எதிர்விளைவை உண்டாக்கும் பேச்சு என்பதுகூடவா புரியாது – அந்த ‘மேதாவி களுக்கு?’

திருப்பரங்குன்றத்தில் வேண்டுமென்றே மதக் கலவரத்தைத் தூண்டி, இவ்வாண்டு (2026) வரவிருக்கும் தேர்தலில் ‘வாக்கு வங்கி’யாக அதனை மாற்றிவிடலாம் என்று கனவு காணும் இந்த ‘மகா அறிவு ஜீவி’களுக்குப் பதில் சொல்வதற்கு ஒரு சாதாரண பகுத்தறிவுக் குடிமகனே போதுமே!

வழக்கமாக நடைபெற்றுவரும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியைத்
தடை செய்ததா, தமிழ்நாடு அரசு?

பக்தர்கள் வசதிக்காக – வழிபாட்டிற்காக, கோயில் சம்பிரதாயப்படி ‘‘தீபம்’’ ஏற்றவேண்டிய நாளில், முறையாக அங்கே ஏற்றிவிட்ட நிகழ்ச்சிக்கு ஏதாவது தடை – இடையூறு ஏற்பட்டதா? அதற்கு அரசால் ஏதாவது தடை விதிக்கப்பட்டதா?

திட்டமிட்டே பல ஆண்டுகளாக தங்களது ஹிந்துத்துவக் கொள்கையைப் பரப்பிடவும்,  பல நூறு ஆண்டுகளாக அந்த தர்காவில் இஸ்லாமிய பக்தர்கள், அவர்கள் நிகழ்வை நடத்தி வருவதைத்  தடுக்கவும், பழைய தூண் ஒன்றின்மேல் தீபமேற்றுவோம் என்று – ஹிந்து மதவெறிக் கவசம் பூண்டு, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., ஹிந்து முன்னணியினரின் தொடர் முறையற்ற கிளர்ச்சிகளுக்கு எதிராகச் சட்டம் – ஒழுங்கு பாதுகாப்புக் கருதியும், மதச்சார்பின்மை என்ற அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுக்கவேண்டிய தலையாய கடமை –தமிழ்நாடு மாநில அரசுக்கு உண்டு என்ற முறையில்தான் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

இதைத் தேர்தலுக்கு ‘மூலதனமாக்கி’, தொடர் பிரச்சினைகளை உருவாக்கி திட்டமிட்டே மதக் கலவரமாக்கிக் கொள்ள, மூலையில் தள்ளப்பட்டு, முக்காடுடன் உள்ள அரைவேக்காடு அண்ணாமலைகளும் முயற்சித்துத் தோற்ற வரலாற்றை, ‘பிரதான்’ போன்ற ‘உலகமகா அறிவாளி’கள் அறியமாட்டார்களா?

நீதிபதிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்துணைப் பேரும் முட்டாள்களா?

திண்டுக்கல் மாவட்ட கோயில் பிரச்சினைத் தீர்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால், தமிழ்நாடு மதக் கலவர பூமியாக்கிவிடக் கூடாது என்பதால், நீதிமன்றத்தில் அமர்ந்து, மேல்முறையீடுகளில் (ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்புக்குத்) தடை விதித்த நீதிபதிகள் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் உள்பட அனைவருமே, பொது நிலையாளர்களாக இருந்து திருப்பரங்குன்றத்தில் நடப்புகளைப்பற்றி கருத்துக் கூறிய அனைவருமே, ஒன்றிய அமைச்சர் பார்வையில் முட்டாள்களா?

ஆணவத்தோடு ஒன்றிய அமைச்சர் பேசுகிறார்!

பேசுங்கள், நிறைய! பலமடங்கு பேசுங்கள்; தமிழர்களை ‘முட்டாள்கள்’ என்று பேசுங்கள்; அது போதும்; ஆளும் தி.முக. அணி வாகை சூடி, மீண்டும் முன்புபோல உங்களது கட்சிகளைத் தோற்கடிக்க!

நாவடக்கமின்றிப் பேசும் இப்படிப்பட்ட ஆணவப் பேச்சுக்கு, நீங்கள் கொடுக்கவேண்டிய விலை மிக அதிகமாக இருக்கும் என்பதை இவ்வாண்டு (2026) நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் புரிய வைக்கும்!

இது உறுதி! உறுதி!!

புரியாதவர்கள் அல்லர்
தமிழ்நாட்டு மக்கள்!

முன்பு, தமிழர்களைத் ‘திருடர்கள்’ (‘‘கோயில் சாவியைத் திருடியவர்கள்’’) என்றார் பிரதமர் மோடி – ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தில்! . அதுபோன்று பேசுவது ஒரு நாக்கு; தமிழ்நாட்டுக்கு வந்ததும் மற்றொரு நாக்கு, தமிழ் மொழிப் பெருமை, திருவள்ளுவர் பெருமைபற்றி மற்றொரு குரலில் தமிழினப் பெருமைகளைப் பேசும்!

இவற்றைப் புரியாதவர்கள் அல்ல தமிழ்நாட்டு மக்கள் – வாக்காளப் பெருமக்கள்!

நுனிக் கிளையில் அமர்ந்து, அடிக் கிளையை வெட்டும் மஹா ‘அறிவுக் கொழுந்துகளே’, தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்து, இப்படி ஆணவப் பேச்சுகளைத் தரந்தாழ்ந்து கூறுங்கள்!

தமிழ்நாட்டில் ‘எஸ்.அய்.ஆர்.’ கைகொடுத்து விடும் என்றும் தப்புக் கணக்குப் போடாதீர்!

புத்திக் கொள்முதலுக்கு ஆயத்த மாகுங்கள்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை   

1.1.2026   

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *