சென்னை, ஜன.1 பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் நிறுவப் பட்ட மூன்று பழை மையான உயர்நீதிமன் றங்களில் சென்னை உயர்நீதிமன்றமும் ஒன்றாகும்.
26.06.1862 அன்று விக்டோரியா மகாராணியால் வழங்கப்பட்ட ‘லெட்டர்ஸ் பேட்டண்ட்’ மூலம் உரு வாக்கப்பட்டு, 1862 ஆகஸ்ட் 15 அன்று முறையாகச் செயல்பாட்டுக்கு வந்தது.
மூன்று முன்னோடி நீதிமன்றங்கள்
பிரிட்டிஷ் இந்தியாவில் கல்கத்தா (ஜூலை 1862), பம்பாய் (ஆகஸ்ட் 1862) ஆகியவற்றுடன் சமகாலத்தில் தொடங்கப்பட்ட மூன்றாவது நீதிமன்றம் இதுவாகும்.
சிறப்பம்சம்
தற்போது நாம் பார்க்கும் பிரமாண்டமான சிவப்பு நிறக் கட்டடம் 1892-இல் கட்டி முடிக்கப்பட்டது. இது உலகப் புகழ்பெற்ற இந்தோ-சரசெனிக் பாணியில் வடிவமைக்கப்பட்டது. ஜே.டபிள்யூ. பிராசிங்டன் என்பவரால் திட்டமிடப்பட்டு, பின்னர் ஹென்றி இர்வின் என்பவரால் முடிக்கப்பட்டது.
லண்டனுக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
சிறீஅரிகோட்டாவில்
எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட்டின்
மூன்றாம் கட்ட இயந்திர பரிசோதனை வெற்றி
மூன்றாம் கட்ட இயந்திர பரிசோதனை வெற்றி
சிறீஅரிேகாட்டா, ஜன.1 சிறிய ரக செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்காக எஸ்எஸ்எல்வி ராக்கெட் உருவாக்கப்பட்டது. இதில் 3ஆம் கட்ட இயந்திரம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.
பரிசோதனை வெற்றி
திட எரிபொருளில் இயங்கும் இந்த இயந்திரம் ஆந்திராவின் சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மய்யத்தில் நேற்று முன்தினம் (30.12.2025) வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது. இந்த திட எரிபொருள் இயந்திரம் ராக்கெட்டுக்கு வினாடிக்கு 4 கி.மீ. வேகத்தை கொடுக்கும்.
எஸ்எஸ்எல்வி ராக்கெட் திறம்பட செயல்படும் வகையில் இதன் 3ஆம் கட்ட இயந்திரத்தில் உள்ள இக்னைட்டர், கூம்பு குழாய்கள் ஆகியவற்றின் வடிவம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை 108 வினாடிகள் நடைபெற்றது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததன் மூலம், மேம்படுத்தப்பட்ட 3-ஆம் கட்ட இயந்திரம் ராக்கெட்டில் பொருத்த தகுதி பெற்றுள்ளது.
சிறீஅரிகோட்டாவில் கடந்தாண்டு ஜூலை மாதம் திட எரிபொருள் இயந்திரம் தயாரிப்பு மய்யம் தொடங்கப்பட்டது. உள்நாட்டு தொழில் நுட்பம் மூலம் 10 டன் எடையுள்ள திட எரிபொருள் கலவை இயந்திரம் சதீ்ஷ் தவான் விண்வெளி மய்யத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இது உலகின் பெரிய திட எரிபொருள் கலவை இயந்திரமாகும்.
சதீஷ் தவான் விண்வெளி மய்யத்தில் அமைந்துள்ள திட எரிபொருள் இயந்திர தயாரிப்பு மய்யம் மற்றும் பரிசோதனை மய்யம் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனம் முதல்முறையாக ஏவவுள்ள முதல் ராக்கெட்டின் திட எரிபொருள் மோட்டார் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு –மேலாண்மை சார்ந்த
வேலை வாய்ப்பை அளிக்கும் கல்வித் திட்டம் தொடக்கம்
புதுச்சேரி, ஜன.1 ஒரு தனித்துவமான உயர்கல்வி நிறுவனமாகிய கான்ஷியஸ் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிட்டியூட், லாஜிஸ்டிக்ஸ் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மென்ட், டேட்டா சயன்ஸ் அண்ட் ஆர்ட்டிஃபிசியல் இன்டலிஜென்ஸ், கான்ஷியஸ் மேனேஜ்மென்ட் அண்ட் லீடர்ஷிப், ஆகிய துறைகளில் பி.ஜி. டிப்ளமோ மற்றும் புரஃபஷனல் டிப்ளமோ பயிற்சிகளை வழங்குவதற்காக புதுச்சேரியில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
பன்னாட்டு கலை மற்றும் அறிவியல் அகாடமியின் தலைவர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரியான டாக்டர். கேரி ஜேக்கப்ஸ் புதுச்சேரியில் இந்த கான்ஷியஸ் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிட்டியூட் நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். சி.எம்.அய். நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான எஸ்.எஸ். சிறீஜித், மதர்’ஸ் சர்வீஸ் சொசைட்டியின் செயலாளரான என். அசோகன், இந்நிறுவனத்திற்கான கல்வி முன்முயற்சிகளின் தலைவரான பேராசிரியர் எஸ். கணேசன் மற்றும் இணை இயக்குநரான சுவேதா ரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இது குறித்து சி.எம்.அய். நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான எஸ். எஸ். சிறீஜித் கூறுகையில், “எங்கள் கவனம் வெறும் நிர்வாகத்தைக் கற்பிப்பதில் மட்டுமல்ல; எதிர்காலத்திற்கான தலைவர்களை வடிவமைப்பதிலும் உள்ளது.
செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) உந்துதல் பெற்ற புத்தாக்கம், உலகளாவிய செயல்பாட்டுத் திறன் மற்றும் உணர்வுபூர்வ தலைமைத்துவக் கொள்கைகள் ஆகியவற்றை இது ஒருங்கிணைக்கிறது. தளவாடங்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் நடைமுறை சார்ந்த, வேலைவாய்ப்பு நோக்குடைய கற்றல் மூலம், நாங்கள் நிபுணர்களை, குறிப்பாக வளர்ந்து வரும் தலைவர்களை, பொறுப்புடன் வழிநடத்தவும், தொடர்ச்சியாகத் தகவமைத்துக் கொள்ளவும், வேகமாக மாறிவரும் உலகப் பொருளாதாரத்தில் நீண்ட கால, நிலையான நிறுவன மதிப்பை உருவாக்கவும் தயார்படுத்துகிறோம்” என்றார்.
