அமைச்சர்
சிவசங்கர் தகவல்
சென்னை, ஜன.1 தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வெளியிட் டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:
புதிய சாதனை படைத்த போக்குவரத்துத் துறை
நடப்பு கல்வியாண்டில் சுமார் 60 லட்சம் பள்ளி மாணவ, மாணவியர் களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் (Free Bus Pass) வழங்கப்பட்டுள்ளன. இது தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. அரசின் இந்த முன்னெடுப்பு, மாணவர்களின் நலன், டிஜிட்டல் முறையிலான நிர்வாகம் மற்றும் பல்வேறு துறைகளுக்கு இடையேயான சிறந்த ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாறு அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டுவாரியாக பயண அட்டைகள் விவரம்:
கடந்த மூன்று ஆண்டுகளில் பயண அட்டைகள் வழங்கப்பட்ட விவரங்கள் பின்வருமாறு:
2023 – 2024 ––- 20.06 லட்சம் – 2024 -2025 – 25.01 லட்சம் 25 சதவீதம் உயர்வு 2025 – 2026 – 60.00 லட்சம் 140 சதவீதம் உயர்வு.
தேவையுள்ள அனைத்து மாணவர் களும் எவ்விதத் தடையுமின்றி பள்ளிக்குச் செல்ல இந்த வசதி வழிவகை செய்கிறது.
கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாணவர்களின் பயணச் சுமையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. முறையான ஒருங்கிணைப்பு மூலம் குறுகிய காலத்தில் இத்தனை பேருக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, அவர்கள் எவ்வித சிரமமுமின்றி கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் இந்த வசதியை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.
