கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

  1. 01. 2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை

* பொங்கல் திருநாளை சமத்துவம் நிறைந்த திராவிடப் பொங்கலாக கொண்டாட வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

* தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் நடத்திய வாக்காளர் சிறப்புத் திருத்தத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து தி.மு.க. தேர்தல் ஆணையத்திற்கு கடிதம். ஆதார் எண்ணை ஆதாரமாகக் கொண்டு வாக்காளர்களை சேர்க்க கோரிக்கை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்

* சாமியார் யோகி தலைமையில் பாஜக ஆளும் உ.பி. காஜியாபாத்தில், ஹிந்து ரக்‌ஷா தளம் வாள்கள் விநியோகம்: காசியாபாத்தில் உள்ள ஷாலிமார் கார்டனில் உள்ள தங்களது அலுவலகத்தில் இருந்து வாள்களை விநியோகித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இந்து ரக்ஷா தள் (HRD) அமைப்பைச் சேர்ந்த பத்து பேர் கைது. அந்த அமைப்பின் உறுப்பினர்களிடமிருந்து எட்டு வாள்களும் மீட்கப்பட்டதாக காவல்துறை கூறியது.

* விபி-ஜி ராம்-ஜி சட்டத்தில் உண்மையான கூட்டு அணுகுமுறை இல்லாதது, ஆதிக்கம் செலுத்தும் அதிகார மய்யமான ஒன்றிய அரசால் மாநிலங்கள் மீது விகிதாசாரமற்ற நிதிச் சுமையை சுமத்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. மேலும், இந்தியாவின் கூட்டாட்சி அரசியலமைப்பு அமைப்பில் கூட்டாட்சி அலகுகள் சமமான அதிகார மய்யங்களாக இருக்க வேண்டும் என்ற நிதி கூட்டாட்சியின் ஒரு சாதகமற்ற போக்கை இது நமக்கு எச்சரிக்கிறது என்கிறார் வழக்குரைஞர் கஸ்துப் திவாரி.

* தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ‘தேர்தல் ஆணையத்தையும் நாட்டையும் அழிக்க ஒரு பணிக்கு அனுப்பப்பட்டுள்ளார்’. வாக்குத் திருட்டு நடைபெறுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியின் தலைமையில் பத்து பேர் கொண்ட குழு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை சந்தித்த பின் இவ்வாறு கூறினார்.

தி இந்து

* வாக்காளர் பட்டியலில் இருந்து பெண்கள் பெருமளவு நீக்கம்: தமிழ்நாடு மற்றும் பீகார் போலவே, மேற்கு வங்கத்திலும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் போது ஆண்களை விட அதிக பெண்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று வாக்குச்சாவடி நிலை தரவுகளின் பகுப்பாய்வு காட்டுகிறது.

தி டெலிகிராப்

* பாஜக ஆளும் மகாராஷ்டிரா இந்தூரில் டயோரியா: 10 பேர் உயிரிழப்பு: இந்தூரில் அசுத்தமான குடிநீரை பருகிய 10 பேர் உயிரிழப்பு: 100 பேர் மருத்துவமனையில் அனுமதி. இந்தத் தண்ணீரைக் குடித்த பலருக்குக் கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உயிரிழந்தவர்களில் 6 மாதக் குழந்தையும், 6 பெண்களும் அடங்குவர்.

டைம்ஸ் ஆப் இந்தியா

* பாஜக ஆளும் மகாராஷ்டிரா நாக்பூரில் பிரார்த்தனைக் கூட்டத்தின் போது ஒரு கிறிஸ்தவ பாதிரியார் மற்றும் 11 பேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, மதவெறி கொண்ட கட்சி என்று குற்றம் சாட்டி, காங்கிரஸ் கட்சி பாஜகவை கடுமையாக சாடியுள்ளது. கலவரத்தில் ஈடுபடும் பஜ்ரங் தள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

 – குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *