ஜனவரி
9.1.2025
நீதிமன்றங்களில் சமூகநீதி – ஆர்ப்பாட்டம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி இடங்களுக்கு நான்கு பார்ப்பனர்களை நியமனம் செய்ய உயர்நீதிமன்றம் கொலிஜியத்திற்குப் பரிந்துரையா? சமூகநீதியை வலியுறுத்தி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்!
- ஜனவரி
- 9.1.2025
- நீதிமன்றங்களில் சமூகநீதி – ஆர்ப்பாட்டம்
- 15.1.2025
- திராவிடர் திருநாள் விழா
- பிப்ரவரி
- 6.2.2025
- சிறப்புக் கூட்டம்
- 23.02.2025
- ஹிந்திக்குத் எதிராக…
- மார்ச்
- 01.03.2025
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள்
- 10.03.2025
- அன்னை மணியம்மையார் பிறந்த நாள்
- 16.03.2025
- அன்னை மணியம்மையாரின் நினைவு நாள்
- 23.03.2025
- மேற்கு வங்கத்தில் வைக்கம் – சுயமரியாதை இயக்கம்: 100
- ஏப்ரல்
- 14.04.2025
- அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள்
- 29.04.2025
- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்
- மே
- 02.05.2025
- அய்ம்பெரும் விழா
- 20.05.2025
- கண்டன ஆர்ப்பாட்டம்!
- ஜூன்
- 01.06.2025
- முப்பெரும் விழா
- 03.06.2025
- கலைஞர் பிறந்த நாள்
- 22.06.2025
- கருத்தரங்கம் – கண்காட்சி
- ஜூலை
- 06.07.25
- முப்பெரும் விழா
- 10.07.2025
- குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை
- ஆகஸ்ட்
- 07.08.2025
- கலைஞர் நினைவு நாள்
- 14.08.2025
- 100 கூட்டங்கள்:-
- 19.08.2025
- கண்காட்சி
- 22.08.2025
- ‘பெரியார் உலக’ப் பணிகள்
- செப்டம்பர்
- 02.09.2025
- ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படம் திறப்பு
- 08.09.2025
- திராவிட மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்
- 14.09.2025
- அமெரிக்காவில்…
- 15.09.2025
- அண்ணா பிறந்த நாள்
- 17.09.2025
- பெரியார் பிறந்த நாளில் உறுதிமொழி ஏற்பு
- 28.09.2025
- பெரியாருக்கான ஓட்டம்
- அக்டோபர்
- 04.10.2025
- சுயமரியாதை இயக்கம் – 100
- 16.10.2025
- செருப்பு வீச்சா? – ஆர்ப்பாட்டம்
- 23.10.2025
- தலைமைச் செயற்குழு
- நவம்பர்
- 01.11.2025
- மனித நேயர் மாநாடு
- 09.11.2025
- சிங்கப்பூரில்…
- 26.11.2025
- இலால்குடியில் வீரவணக்க மாநாடு
- டிசம்பர்
- 02.12.2025
- சுயமரியாதை நாள்
- 04.12.2025
- ஆர்.என்.ரவிக்குக் கண்டனம்
- 06.12.2025
- பெரியார் சிலைத் திறப்பு
- 24.12.2025
- தந்தை பெரியார் நினைவு நாள்
- 27.12.2025
- சட்ட விளக்கம்
15.1.2025
திராவிடர் திருநாள் விழா

சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் திராவிடர் திருநாள் விழாவில் விளையாட்டுப் போட்டிகள், தப்பட்டை ஆட்டம், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், செவ்வியல் மக்களிசை, சிலம்பாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடந்தேறின. கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பல்துறை வித்தகர்களுக்கு ‘பெரியார் விருது’ வழங்கிச் சிறப்பித்தார்.
பிப்ரவரி
6.2.2025
சிறப்புக் கூட்டம்

சென்னை பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில் ‘அறிவியல் மனப்பான்மையும் நாட்டின் முன்னேற்றமும்’ எனும் தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை.
23.02.2025
ஹிந்திக்குத் எதிராக…
தேசியக் கல்விக் கொள்கை என்று – ஹிந்தியை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கான நிதியைத் தர முடியும் என்று கூறும் ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
மார்ச்
01.03.2025
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள்
72ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி பெரியார் திடலுக்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கழகத் தலைவர் அவர்கள் பொன்னாடை அணிவித்து, பிறந்த நாள் வாழ்த்து! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை.
10.03.2025
அன்னை மணியம்மையார் பிறந்த நாள்
தொண்டறச் செம்மல் அன்னை மணியம்மையாரின் 106ஆம் ஆண்டு பிறந்த நாள் – தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் தந்தை பெரியார் சிலைக்கும், அன்னை மணியம்மையார் படத்திற்கும் மாலை அணிவித்துக் கொண்டாட்டம்.
16.03.2025
அன்னை மணியம்மையாரின் நினைவு நாள்
அன்னை மணியம்மையாரின் 47ஆம் நினைவு நாள் – கழக மகளிரணியினர், பாசறையினர், கழகத் தோழர்கள் அன்னையார் சிலைக்கும், பெரியார் திடலில் தந்தை பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து, சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடம், தந்தை பெரியார் மற்றும் அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை.
23.03.2025
மேற்கு வங்கத்தில் வைக்கம் –
சுயமரியாதை இயக்கம்: 100
சுயமரியாதை இயக்கம்: 100

மேற்கு வங்க மாநிலம் ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதன் நகரில் பெரியார் – அம்பேத்கர் சித்து கானு படிப்பு வட்டம் சார்பில் வைக்கம் மற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – கழகத் தலைவர் ஆஸ்திரேலியாவில் இருந்து காணொலி மூலம் கருத்துரை.
ஏப்ரல்
14.04.2025
அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள்
அண்ணல் அம்பேத்கரின் 135ஆம் ஆண்டு பிறந்தநாள். சென்னையில் கழகத் தலைவர் தலைமையில் மலர் மாலை அணிவித்து ‘சமத்துவ நாள்’ உறுதிமொழி ஏற்று மரியாதை.
29.04.2025
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் – சென்னையில் அவரது சிலைக்குக் கழகத் தலைவர் மலர் மாலை அணிவித்து மரியாதை.
மே
02.05.2025
அய்ம்பெரும் விழா
சென்னை சர்.பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில் 42ஆம் ஆண்டு புரட்சிக் கவிஞர் விழா – தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழா – தமிழ் வார விழா – முதலமைச்சருக்கு பாராட்டு – ‘குடிஅரசு’ நூற்றாண்டு விழாவில் கழகத் தலைவர் அவர்கள் விழாப் பேருரை.
20.05.2025
கண்டன ஆர்ப்பாட்டம்!
மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதா? ஒன்றிய அரசைக் கண்டித்து கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஜூன்
01.06.2025
முப்பெரும் விழா
சென்னை பெரியார் திடலில் ‘குடிஅரசு’ நூற்றாண்டு நிறைவு விழா – ‘விடுதலை’ 91ஆம் ஆண்டு தொடக்க விழா – ‘நூற்றாண்டு கண்ட ‘குடிஅரசு: ஒரு முத்துக்குளியல்’ நூல் வெளியீட்டு விழாக்கள் – கழகப் பொருளாளர் வீ.குமரேசன் வரவேற்புரையாற்ற, கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வையொட்டி பெரியார் பகுத்தறிவு எணினி நூலகம் – ஆய்வு மய்யத்தில் சுயமரியாதை இயக்க இதழ்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ‘குடிஅரசு’ அலுவலகம் போல் அமைக்கப்பட்டது.
03.06.2025
கலைஞர் பிறந்த நாள்
முத்தமிழறிஞர் கலைஞர் 102 ஆம் ஆண்டு பிறந்தநாளில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கழகத் தலைவர் மாலை அணிவித்து மரியாதை.
22.06.2025
கருத்தரங்கம் – கண்காட்சி
சென்னை பெரியார் திடலில் 96ஆம் ஆண்டில்
பெரியார் பதிப்பகங்கள் கண்காட்சியினைக் பெரியார் பகுத்தறிவு கணினி நூலகத்தில் கழகத் தலைவர் திறந்து வைத்தார். கருத்தரங்கம் நடைபெற்றது.
ஜூலை
06.07.25
முப்பெரும் விழா
மன்னார்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் சுயமரியாதை இயக்கம் – ‘குடிஅரசு’ இதழ் – நூற்றாண்டு – ‘கொள்கை வீராங்கனைகள்’ நூல் வெளியீடு – முப்பெரும் விழா – 54 வீராங்கனைகளில் 34 வீராங்கனைகள் வருகை புரிந்து சிறப்பித்தனர்.
10.07.2025
குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை

46 ஆவது ஆண்டாக குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை வள்ளல் வீகேயென் மாளிகையில் ஜூலை 10 முதல் 13 வரை நடைபெற்றது. கழகப் பொறுப்பாளர்களும், சிறப்பு விருந்தினர்களும் பல்வேறு தலைப்புகளில் வகுப்பெடுத்தனர். கழகத் தலைவர் காணொலி வாயிலாக வகுப்பெடுத்துச் சிறப்பித்தார்.
ஆகஸ்ட்
07.08.2025
கலைஞர் நினைவு நாள்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவு நாள்! கலைஞரின் நினைவிடத்தில், மருத்துவப் பயனாளியாக பயன்பெற்றுத் திரும்பிய நிலையில், முதன்முதலாக தோழர்கள் புடைசூழ கழகத் தலைவர் மலர்வளையம் வைத்து மரியாதை.
14.08.2025
100 கூட்டங்கள்:-
மறைமலை நகர் – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டை விளக்கி 14.08.2025 முதல் 24.08.2025 வரை 100 பரப்புரைப் பெருமழைக் கூட்டங்கள் தமிழ்நாடு – புதுச்சேரி தழுவிய அளவில் நடைபெற்றன.
19.08.2025
கண்காட்சி
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ‘‘அச்சுப் பண்பாடு – இதழ்கள் கண்காட்சி’’யில் அரிய புத்தகங்களின் காட்சியைத் கழகத் தலைவர் பார்வையிட்டார்.
22.08.2025
‘பெரியார் உலக’ப் பணிகள்
காது கிருமித் தொற்று காரணமாக, அறுவை சிகிச்சைக்குப் பின், முதன் முதலாகத் திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள ‘பெரியார் உலக’ப் பணிகளை நேரில் சென்று கழகத் தலைவர் பார்வை – ஆய்வு.
செப்டம்பர்
02.09.2025
ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படம் திறப்பு

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். “பெரியார்தான் தமிழ்நாட்டின் முதலீடு” – கழகத் தலைவர் பெருமிதம்.
08.09.2025
திராவிட மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசின் காவி வரைவு அறிக்கையைக் கண்டித்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் திராவிட மாணவர் கழகம் ஆர்ப்பாட்டம். சென்னையில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரை.
14.09.2025
அமெரிக்காவில்…
அமெரிக்கா வட கரோலினா – கேரியில் பெரியார் பிறந்த நாள் கருத்தரங்கம் – கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் பங்கேற்பு.
15.09.2025
அண்ணா பிறந்த நாள்
அறிஞர் அண்ணா பிறந்த நாளில் சென்னையில் கழகத் தலைவர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு.
17.09.2025
பெரியார் பிறந்த நாளில் உறுதிமொழி ஏற்பு

தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் உலகின் பல நாடுகளில் கொண்டாட்டம். சென்னையில் கழகத் தலைவர் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்பு. சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பெரியார் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம்.
28.09.2025
பெரியாருக்கான ஓட்டம்
அமெரிக்கா வட கரோலினா நகர் – கனடா – மிஸ்ஸி சாகா நகரில் பெரியார் பிறந்த நாள் கொண்டாட்டம் – “பெரியாருக்கான ஓட்டம்” நடைபெற்றது.
அக்டோபர்
04.10.2025
சுயமரியாதை இயக்கம் – 100

செங்கை மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்றது. சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நினைவுக் கல்வெட்டைத் திறந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவுரையாற்றினார். அனைத்துக் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். மக்கள் பெருந்திரளோடு பேரணி எழுச்சியுடன் நடைபெற்றது.
16.10.2025
செருப்பு வீச்சா? – ஆர்ப்பாட்டம்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சைக் கண்டித்து கழக சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டம்.
23.10.2025
தலைமைச் செயற்குழு
சென்னை பெரியார் திடலில் கழகத் தலைவர் தலைமையில் கழக தலைமைச் செயற்குழு.
29.10.2025
“இததான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி – இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” – தமிழ்நாடு தழுவிய கழகத் தலைவரின் பரப்புரைத் தொடர் பயணம் தொடங்கியது – பரப்புரைக் கூட்டங்களில் கழகத் தலைவரிடம் “பெரியார் உலக” நன்கொடை வழங்கல்.
நவம்பர்
01.11.2025
மனித நேயர் மாநாடு
ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகரில் பெரியார் பன்னாட்டமைப்பு – பெரியார், அம்பேத்கர் சிந்தனை வட்டம் – ஆஸ்திரேலியா (PATCA) இணைந்து நடத்திய 4ஆம் பன்னாட்டு மனிதநேயர் மாநாடு. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கழகத் தலைவர் ஆசிரியர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி மூலம் வாழ்த்து.
09.11.2025
சிங்கப்பூரில்…
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் நடத்திய “பெரியார் விழா – 2025” இல் கழகத் தலைவர் சிறப்புரை.
26.11.2025
இலால்குடியில் வீரவணக்க மாநாடு
இலால்குடியில் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் 69ஆம் ஆண்டு வீரவணக்க மாநாடு – ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா! மாநாட்டில் சட்ட நகல் எரித்துச் சிறை சென்ற கருஞ்சட்டை வீரர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மரியாதை. ஜாதி ஒழிப்புப் போராட்ட வீர வணக்க நாள் பேரணி – மாநாட்டுக்குக் கழகத் தலைவர் தலைமை வகித்து வீர வணக்க உரை.
டிசம்பர்
02.12.2025
சுயமரியாதை நாள்

கழகத் தலைவர் ஆசிரியரின் 93ஆம் ஆண்டு பிறந்த நாள். கழகத் தலைவரின் அடையாறு இல்லத்திற்கு நேரில் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து. அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. பொறுப்பாளர்கள் வாழ்த்தினர்.
சென்னை பெரியார் திடலில் கழகத் தலைவர் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – சுயமரியாதை நாள் கருத்தரங்கம் – கவியரங்கம் – பட்டிமன்றம் – நூல் வெளியீடு – பல்துறை பெருமக்கள் வாழ்த்துரை. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை. கழகத் தலைவர் ஏற்புரை.
04.12.2025
ஆர்.என்.ரவிக்குக் கண்டனம்
ஆளுநர் ஆர்.என்.ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற சென்னை ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் தலைமை வகித்து கண்டன உரை.
06.12.2025
பெரியார் சிலைத் திறப்பு
தந்தை பெரியார் முழு உருவச் சிலைத் திறப்பு – சண்முகம் – சரோஜா நினைவு பெரியார் படிப்பகம் திறப்பு – ஆசிரியர் கி.வீரமணி நூலகம் திறப்பு – பெரியார் தனிப் பயிற்சி மய்யம் திறப்பு – தமிழர் தலைவர் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் என தஞ்சை – தெற்கு நத்தத்தில் அய்ம்பெரும் விழா – கழகத் தலைவர் சிறப்புரை.
24.12.2025
தந்தை பெரியார் நினைவு நாள்
தந்தை பெரியார் 52ஆம் ஆண்டு நினைவு நாளில் பெரியார், அன்னை மணியம்மையார், சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடங்களில் கழகத் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அமைதிப் பேரணி நடைபெற்றது. கழகத் தலைவர் முன்மொழிந்த அய்யா நினைவு நாள் சூளுரை ஏற்கப்பட்டது.
27.12.2025
சட்ட விளக்கம்
சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் கழக வழக்குரைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. விழிப்புணர்வு பயிலரங்கம் – சட்ட விளக்க வகுப்புகளில் கழகப் பொறுப்பாளர்கள் வகுப்பெடுத்தனர். ‘ஜனநாயகம்’ என்னும் தலைப்பில் கழகத் தலைவர் வகுப்பு நடத்தினார்.
