தமிழ்நாடு அரசு மற்ற மாநிலங்களை விட கூடுதல் கடன் பெற்றதாக எடப்பாடி பழனிச்சாமி உள்பட எதிர்கட்சியினர் வைத்த குற்றசாட்டுக்கு அமைச்சர் சா.சி.சிவசங்கர் பதில் அளித்துள்ளார். ஒரு மாநிலம் எவ்வளவு கடன் வாங்க முடியும் என்பதற்கு ஒன்றிய அரசு வரையறுத்துள்ள குறியீடுக்கு கீழ்தான், தமிழ்நாடு கடன் பெற்றுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். எதிர்க்கட்சியினர் தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் பல மாநிலங்கள், அளவுக்கு மீறி கடன் வாங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
