இறந்தவர்களை உரிய மரியாதையுடன் வழியனுப்புவது என்பது மனிதகுலத்தின் மாபெரும் கடமைகளில் ஒன்று. ஆனால் சத்தீஸ்கரில் 65 வயதான புனியா பாய் என்பவர் கிறிஸ்தவத்திற்கு மாறினார் என்ற ஒரே காரணத்திற்காக அவரது இறந்த உடலை 3 நாள்களாக அடக்கம் செய்ய ஊர்க்காரர்கள் அனுமதிக்கவில்லை. இறுதியாக புனியாவின் குடும்பத்தினர் மீண்டும் இந்து மதத்திற்கு மாறிய பிறகே இறுதிச்சடங்கு நடைபெற்றுள்ளது. மனிதம் மரித்து மதம் தலைதூக்கினால் இப்படித்தான் நடக்கும்.
நாளையே கடைசி : பான் கார்டு வேலை செய்யாது!
இன்று டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் ஆதார் – பான் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இணைக்கத் தவறினால், புத்தாண்டு முதல் உங்கள் பான் கார்டு செயல்பாட்டை இழந்துவிடும் (inoperative). மேலும், செயலற்ற பான் எண்ணை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர, ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, உடனே பான் – ஆதாரை இணைத்து விடுங்கள்.
