சென்னை, டிச.31 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் தொடர்பான பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய நடைமுறையை அறிவித்துள்ளது. அதன்படி, வாக்காளர்கள் தங்கள் எஸ்.அய்.ஆர். (SIR – Statement of Information Record) கணக்கீட்டு படிவங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களிடம் (Booth Level Agents – BLA) வழங்கலாம்.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்:
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்கள், வாக்காளர்களிட மிருந்து நாளொன்றுக்கு அதிகபட்சம் 10 படிவங்களை மட்டுமே பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முகவர்கள் தாங்கள் பெற்ற படிவங்களை அந்தந்த பகுதிக்குரிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (Booth Level Officers – BLO) முறையாக ஒப்படைக்க வேண்டும்.
படிவங்களில் உள்ள விவரங்கள் அனைத்தும் சரியாக இருப்பதை உறுதி செய்த பிறகே முகவர்கள் அவற்றை வாங்க வேண்டும். மேலும், “படிவங்களில் உள்ள விவரங்கள் சரிபார்க்கப்பட்டு திருப்தி அடையப் பட்டது” என்ற உறுதிமொழியை முகவர்கள் வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை விரைவுபடுத்தவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
