சென்னை, டிச.31 தமிழ்நாட்டில் அய்.ஏ.எஸ்., அதிகாரிகள் 9 பேரை இடமாற்றம் செய்து தலைமைச்செயலாளர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:
மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் – கலை அரசி, தமிழக கதர் கிராமத் தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் – சம்பத் நில நிர்வாகம்/ நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குநர்- மகேஸ்வரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் – ஜான் லூயிஸ், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்டுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு சிறப்புச் செயலாளர் சரவண வேல்ராஜ், புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் – மோகன், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்குநர்- சிவராசு
தமிழக நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் – ராஜேந்திர ரத்னு( கூடுதல் பொறுப்பு) தமிழக தொழில்முன்னேற்ற நிறுவனம்(சிப்காட்) செயல் இயக்குநர்- கேத்தரின் சரண்யா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
