வேலூர், டிச.31- வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சுந்தரம்பள்ளி பகுதியை சேர்ந்த ஆதவன் என்பவர், தன்னுடைய விவசாய நிலத்தை ஜேசிபி இயந்திரம் வைத்து சமன் செய்யும் பணியில் ஈடுபட்டபோது ஒரு குடுவையில் தங்கக் காசுகள் கிடைத்ததாக கிராம அதிகாரிக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அதில் 86 தங்கக் காசுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்து கிராம அதிகாரி, வட்டாட்சியர், காவல் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆதவன் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பத்தூரில் நிலத்தைத் தோண்டும்போது தங்க நாணயங்கள் கிடைத்ததா? அதிகாரிகள் விசாரணை
Leave a Comment
