தி.மு.க. வாக்குறுதி… கருத்து தெரிவிக்கலாம்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

2026 தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளின் பணிகள் வேகமெடுத்துள்ளன. அந்த வகையில், சமீபத்தில் தி.முக. தரப்பில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திமுக வாக்குறுதிகள் தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக புதிய செயலியை (App) நாளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிமுகம் செய்யவுள்ளார்.

ரஷ்ய அதிபர் புதின் இல்லம் மீது உக்ரைன் படைகள் தாக்குதலா?

தமிழ்நாடு

ஃப்ளோரிடா, டிச.31 புதின் வீடு மீது உக்ரைன் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திக்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், “இது ரஷ்யாவின் வழக்கமான பொய்” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டை திட்ட வட்டமாக மறுத்துள்ளார்.

உக்ரைன் – ரஷ்யா போர் மூன்றாண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிக அக்கறை காட்டி வருகிறார். இதுவரை பல போர்களை நிறுத்திவிட்டதாக உரிமை கோரும் ட்ரம்ப்புக்கு உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வராதது சவாலாகவே இருந்து வருகிறது.இந்நிலையில், புதின் வீடு மீது உக்ரைன் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திக்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், “போரை நிறுத்துவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தையில் ரஷ்யா ஈடுபட்டாலும், உக்ரைனின் இந்த தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. இந்த தாக்குதல் முயற்சி அரசு தீவிரவாதம் இல்லாமல் வேறென்ன? இதற்காக உக்ரைன் மீது எதிர் தாக்குதல் நடத்துவோம். அதற்கான இலக்குகளை தேர்ந்தெடுத்துவிட்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் மேற்கே உள்ள நோவாகோரோட் பகுதியில் புதினின் வீடு உள்ளது. இதைத்தன் உக்ரைன் தொலைதூரம் சென்று தாக்கவல்ல ட்ரோன்களை ஏவி தாக்கியுள்ளதாக ரஷ்யா குற்றஞ்சாட்டுகிறது. புதினின் வீட்டைக் குறிவைத்து 91 ட்ரோன்கள் ஏவப்பட்டதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜெலன்ஸ்கி மறுப்பு: இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கும்  உக்ரைன் அதிபர் வொலிடிமிர் ஜெலன்ஸ்கி, “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குழுவின் போர் நிறுத்த முயற்சியைக் குலைக்கவே ரஷ்யா இப்படிச் செய்கிறது.

புதின் வீட்டின் மீதான தாக்குதல் என்பது புனைவுக் கதை. போர் நிறுத்தத்தைத் தடுக்கும் ரஷ்யாவின் முயற்சி. இன்னும் சொல்லப்போனால், இது ரஷ்யாவின் வழக்கமான பொய். என்றார்.

 

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு?

நாளை மறுநாள் சென்னையில் முக்கியப் பேச்சுவார்த்தை!

தமிழ்நாடு

சென்னை, டிச.31 தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கான புதிய ஊதிய நிர்ணயம் குறித்த மிக முக்கியமான பேச்சுவார்த்தை, நாளை மறுநாள் (ஜனவரி 2-ஆம் தேதி) சென்னையில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு நிறுவனங்களின் கீழ் இயங்கும் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு (Salesmen and Packers) 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், புதிய ஊதிய நிர்ணயம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் ஜனவரி 2-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யார் தலைமையில் கூட்டம்? : இந்தக் கூட்டம் கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வீரப்பன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு முன்னிலையில் நடைபெறுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகள் குறித்த கோரிக்கைகளை முன்வைக்க உள்ளனர்.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நியாயமான ஊதிய உயர்வு.  பணிப் பாதுகாப்பு மற்றும் இதர படிகள் குறித்த கோரிக்கைகள். அரசுத் தரப்பு விளக்கங்களுக்குப் பிறகு, இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தக் குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நாளை மறுதினம் நடைபெறும் பேச்சுவார்த்தை ஊழியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *