எழுச்சியுடன் நடைபெற்ற பகுத்தறிவு ஆசிரியர் அணி கருத்தரங்கம்.!
புதிய தோழர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
கள்ளக்குறிச்சி,நவ.7- கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் அறி வார்ந்த கருத்தரங்கம் 4.11.2023 அன்று சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் பகுத்தறிவு ஆசிரியர் அணி கட்டமைக்கப்பட்டு வாரத்தில் சனிக்கிழமைதோறும் “தந்தை பெரியாரும் – தமிழ்நாட்டு கல்வியும்” என்ற தலைப்பில் அறி வார்ந்த கருத்தரங்கம் நடத்தப் பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் கருத்த ரங்கம் மிக எழுச்சியுடன் நடை பெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட பகுத் தறிவு ஆசிரியர் அணி மாவட்ட தலைவர் கோ.வேல்முருகன் தலைமை வகித்தார். பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட செய லாளர் சீ.வெங்கடேசன் வரவேற் புரை ஆற்றினார்.
மாநில மருத்துவர் அணி அமைப்பாளர் கோ.சா.குமார், திராவிடர் கழக மாவட்ட தலைவர் கோ.சா.பாஸ்கர், மாவட்ட செய லாளர் சுந்தர்ராஜன், மாவட்ட காப்பாளர் மா.சுப்பராயன், துணைத் தலைவர் செல்வராசு, பகுத்தறி வாளர் கழக மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் எழிலரசன், பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்டத் துணைத் தலை வர் சிகாமணி பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட துணைச் செய லாளர் பாலசுப்பிரமணியன், பகுத் தறிவு இலக்கிய மன்றம் முருகன், ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் முருகானந்தம், ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட செய லாளர் மாயகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதைத் தொடர்ந்து பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப் பாளர் இரா.சிவக்குமார் தனது தொடக்க உரையில் பகுத்தறிவு ஆசிரியர் அணியை மாவட்டத் தினை தாண்டி ஒன்றிய அளவில் கொண்டு சென்று புதிய பொறுப் பாளர்களை நியமிக்க வேண்டும் என்றார்.
அவரது ஆலோசனைப்படி அன்றே கள்ளக்குறிச்சி ஒன்றிய அளவில் பொறுப்பாளர்கள் நிய மிக்கப்பட்டது சிறப்புக்குரியது. மேலும் நவம்பர் – 19 புதுவையில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலை மையில் நடைபெறும் பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில கலந்து ரையாடல் கூட்டத்திற்கு கள்ளக் குறிச்சி மாவட்டத்திலிருந்து பகுத் தறிவு ஆசிரியர் அணி சார்பில் தனி வாகனங்கள் ஏற்பாடு செய்து பெருமளவில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள செய்து கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சிறப்பு சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில தலைவர் தமிழ் பிரபாகரன் தனது நோக்கவுரையில் பகுத்தறிவு ஆசிரியர் அணி தோற்றம் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கி னார்.
தொடக்க பள்ளி ஆசிரியர் முதல் கல்லூரி பேராசிரியர்கள் வரை பகுத்தறிவு ஆசிரியர் அணி யில் சேரலாம்.
தந்தை பெரியாரின் கொள்கை யாளர்கள் என்ற ஒற்றை புள்ளிதான் நம்மை இணைக் கின்றது என்று கூறி தற்பொழுது பகுத்தறிவு ஆசிரியர் அணியை வழிநடத்தும் புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உழைப்பு பற்றியும் எதிர்கால மாணவச் சமுதாயம் மேல் அவர் காட்டும் அக்கறை நவீன குலக்கல்வி திட்டமான விஸ்வகர்மா யோஜனா திட்டம் எதிர்ப்பு முதல் கொண்டு எடுத்து கூறினார்.
கழக பேச்சாளர் இரா. பெரி யார் செல்வம் உரையில், “தந்தை பெரியாரும் தமிழ்நாட்டுக் கல் வியும்” என்ற தலைப்பில் பல்வேறு வரலாற்று தகவல்களை எடுத்து கூறி விளக்கினார்.
மேலும் ஆசிரியர்கள் எவ்வாறு பெரியார் கருத்துகளை மாணவர் களிடம் கொண்டு சேர்க்க வேண் டும் போன்ற பல்வேறு கருத்துகளை கூறி சிறப்பான எழுச்சி உரையாற் றினார்.
பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட அமைப்பாளர் பூ.சக்தி வேல் நன்றியுரை ஆற்றினார்.
பகுத்தறிவு எண்ணம் உடைய ஆசிரியர் பெருமக்களை பகுத்தறிவு ஆசிரியர் அணியில் இணைத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பகுத்தறிவு ஆசிரியர் அணியை வலிமைப்படுத்துவது எனவும், பகுத்தறிவு ஆசிரியர் அணியின் சார்பில் மாதத்திற்கு ஒரு முறை அறிவார்ந்த கருத்தரங்கம் நடத்து வது எனவும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பகுத்தறிவு ஆசிரி யர் அணியை சிறப்பாக கட்ட மைத்து நவம்பர் 19 புதுவையில் நடைபெறும் பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில கலந்துரையாடல் கூட்டத்திற்கு 50 ஆசிரியர்களை அழைத்துச் செல்வது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பகுத்தறிவு ஆசிரியர் அணி பொறுப்பாளர்கள் :
தியாகதுருவம்
ஒன்றிய தலைவர் : க.பால்மணி,
ஒன்றிய செயலாளர் : இரா.இளையராஜா
ஒன்றிய அமைப்பாளர் : க.சுந் தர பாண்டியன், ஒன்றிய துணைத் தலைவர் : மாரிமுத்து, ஒன்றிய துணைச் செயலாளர் : செ.சர வணன், ஒன்றிய துணை அமைப் பாளர்கள் : சதிஸ்.மணிகண்டன்,
ரிஷிவந்தியம்
ஒன்றிய தலைவர் : அன்பழகன்
ஒன்றிய செயலாளர் : ஞா.ஆண்டனி ஆரோக்கியராஜ்
ஒன்றிய அமைப்பாளர் : ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய துணைத் தலைவர் : மா.கோவிந்தராஜ்
பகுத்தறிவு ஆசிரியர் அணி ஏற்பாடு செய்த கருத்தரங்கில் புதிய தோழர்கள் 63 ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.