நாக்கின் மூலம் ‘டைப்’ செய்து கணினி இயக்குநர் சாதனை! ‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில்’ இடம் பிடித்தார்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தஞ்சாவூர், டிச.31- தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கணினி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். வேலை நிமித்தமாக கடந்த 9 ஆண்டுகளாக கிருஷ்ணகிரியில் வசித்து வரும் சுரேஷ்குமார் ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் நாக்கைப் பயன்படுத்தி டைப் செய்து’ இடம் பிடித்திருக்கிறார்.

இது குறித்து சுரேஷ்குமார் கூறியதாவது:

“என்னுடைய அப்பா சிறுவயதில் சைக்கிளில் இன்ஜின் ஒன்றைச் சேர்த்து மோட்டார் வண்டியைப் போல இயங்க வைத்தார். அவர் அந்த சைக்கிளில் போகும் போது, ஊர்மக்கள் எல்லோரும் அப்பாவையும் சைக்கிளையும் வியந்து பார்ப்பார்கள். ஒரு சாதாரண சைக்கிளை ஆக்சிலரேட்டர், பிரேக் போன்றவற்றை வைத்து டிவிஎஸ் 50 (TVS 50) வண்டி போல மாற்றிய என் அப்பாவின் கடின உழைப்புக்குக் கிடைத்த பெயரையும் பாராட்டுகளையும் பார்க்கும்போது, அவரைப் போலவே நானும் சாதனை புரிய வேண்டும் என 13 வயதிலிருந்தே எண்ணம் இருந்தது. நான் +2 படிக்கும் போது அப்பா இறந்துவிட்டதனால் படிப்பில் அதிக கவனம் செலுத்தி கணினித்துறையில் எம்.ஃபில் வரை படித்தேன்.

அதன் பின்னர் வேலை, குடும்பம் என வாழ்க்கை அதற்குள்ளே சுழன்றது. திடீரென ஒருநாள் என் மனைவி வாட்ஸ்அப் குழு ஒன்றில் வந்த செய்தியில் வடமாநில இளைஞர் ஒருவர் தனது மூக்கை வைத்து டைப்பிங் செய்து சாதனை படைத்திருந்தார். அதைக் காட்டி, என்னை நாக்கை வைத்து முயற்சிக்கச் சொல்லிக் கேட்டார்.

முதலில் தயக்கம் இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாம் என கடின பயிற்சிக்குப் பிறகு, ‘மே’ மாதத்தில் A-Z வரை டைப்பிங் செய்து ‘அப்துல் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’இல் இடம்பிடித்தேன். அதைத் தொடர்ந்து பல முயற்சிக்குப் பின், “A-Z முதல் Z-A” என்று தொடர் டைப்பிங் செய்து 25.73 விநாடியில் “இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’இல் இடம்பிடித்திருக்கிறேன். என்னுடைய இந்தச் சாதனையைக் கையிழந்த மாற்றுத்திறனாளிகளுக்குச் சமர்ப்பித்திருக்கிறேன். மேலும், வரும் ஆண்டில் தமிழ் எழுத்துகள் அனைத்தையும் நாக்கின் மூலம் டைப் செய்ய ஆசை இருக்கிறது ” என்று கூறினார் சுரேஷ்குமார்.

 

அனைத்து அரசு இ-சேவை, ஆதார் சேர்க்கை மய்யங்கள்

2 நாள்கள் இயங்காது என அறிவிப்பு

சென்னை, டிச.31- அனைத்து அரசு இ-சேவை, ஆதார் சேர்க்கை மய்யங்கள் 2 நாள்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மென்பொருள் பராமரிப்புப் பணியால் இன்றும், நாளையும் (31.12.2025, 1.1.2026) அரசு இ-சேவை மய்யங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *