இந்த யானைக்குத் தெரியாதோ?
காட்டில் நீர் நிலையில் தண்ணீர் குடிக்கச் சென்ற யானையை, முதலை கவ்வியது. யானை மிகவும் போராடியது என்பது சமூக வலைதள செய்தி.
புராணத்தில் வரும் ஒரு செய்தி நினைவிற்கு வருகிறது. தன் காலை முதலைப் பிடித்த உடன், ‘கஜேந்திரன்’ என்ற யானை, ‘ஆதி மூலமே’ என்று குரல் கொடுக்க, விஷ்ணு தன் கருட வாகனத்துடன் விரைந்து ஓடி வந்து, சக்கர ஆயுதத்தால் முதலையை அழித்தான் என்று 2.11.2025 அன்று வெளிவந்த ‘தினமலர்’ கூறுகிறதே, அந்தத் தகவல், இந்த யானைக்கு தெரியாதோ?
