புவனகிரி ஒன்றிய கழக செயலாளர், ஏ.பி.இராமதாஸ் (வயது 75) 30.12.2025 அன்று இரவு 12 மணிக்கு, தன் இல்லத்தில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இவர் உத்தரப்பிரதேசம் லக்னோவில் நடைபெற்ற பெரியார் மேளா விழாவிற்கு சென்று வந்தவர். பல போராட்டங்களில் கலந்து கொண்டவர். இவருக்கு வெற்றிச்செல்வி என்ற இணையரும், இங்கர்சால், இராவணன், பிரபாகரன் ஆகிய மகன்களும் உள்ளனர். இன்று 31.12.2025 மாலை 4 மணிக்கு உடல் அடக்கம் நடைபெற்றது.
