குடவாசல், டிச. 31- திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் கழக இலட்சியக் கொடியேற்றி புதிய கிளைக் கழகங்கள் அமைப்பது தொடர் பிரச்சாரம் செய்வது என கழக இளைஞரணி அமைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
30.12.2025 செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் திராவிடர் கழக மாவட்ட விவசாய தொழிலாளர் அணி செயலாளர் கீழப்பாலூர் க.வீரையன் இல்லத்தில் குடவாசல் ஒன்றிய கழக இளைஞரணி அமைப்பு கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன் முடி, தலைமை வகித்து கருத்துரை யாற்றினார்.
மாவட்ட இளைஞரணிச் செயலாளர் செ.இரவிக்குமார், அனைவரையும் வரவேற்றார்.
மாநில விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர் வி.மோகன், மாவட்டத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி, ஒன்றியத் தலைவர் ஜெயராமன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீரையன், திராவிட மாணவர் கழக மாவட்ட செயலாளர் அறிவுச்சுடர், ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்.
மாவட்ட இளைஞரணித் தலைவர் கோ.பிளாட்டோ, நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.
நெய்குப்பை பாண்டியன், இன்பத்தமிழ், வணங்காமுடி, அபினேஷ், சபரிநாதன், மனோகரன், நித்திஷ், திருமுருகன், கணேசன், திராவிடமணி, வீர தளபதி, ரிஸ்வந்த், மருதன், மருதையன், பழனி ரத்தினம், சின்னசாமி கார்குழலி வீரம்மாள், அமிர்தம், ஆகியோர் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவித்தனர். ஏராளமான கழக இளைஞரணித் தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். க.இராவணன், நன்றி கூறினார்
தீர்மானம்
18.12.2025 சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற தலைமை செயற்குழு சிறப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு.
குடவாசல் ஒன்றியம் முழுவதும் கழக இளைஞரணி சார்பில் ஏராளமான இடங்களில் கழக இலட்சிய கொடி ஏற்றி புதிய கிளைக் கழகங்கள் அமைப்பது.
தமிழர் தலைவர் ஆசிரியர், பிறந்தநாள் விழா மற்றும் தந்தை பெரியார் நினைவு நாள் நினைவாக பிரச்சாரக் கூட்டம் குடவாசல் ஒன்றியத்தில் 10 க்கு மேற்பட்ட இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
