விழுப்புரம், டிச. 31- விழுப்புரம் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 52 ஆம் ஆண்டு நினைவு நாள் தெருமுனை கூட்டம் 30.12.2025 மாலை 5 மணியளவில் கோலியனூர் கூட்டு சாலையிலும், இரவு 7 மணி அளவில் வளவனூரில் எழுச்சியோடு நடைபெற்றது.
கோலியனூர் கூட்டுச் சாலையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட திராவிட மாணவர் கழக பொறுப்பாளர் இரா.சரண் வரவேற்பு உரையாற்றினார். கோலியனூர் ஒன்றியத் தலைவர் சு.மாறன் தலைமை ஏற்றார். வளவனூரில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர் மு.சரவணன் வரவேற்பு உரையாற்றினார். கோலியனூர் ஒன்றிய அமைப்பாளர் ரா.சிவராமன் தலைமை ஏற்றார்.
இரண்டு கூட்டங்களுக்கும் திராவிடர் கழக மாவட்ட காப்பாளர் கொ.பூங்கான், மாவட்ட துணைத் தலைவர் திருநாவுக்கரசு, விழுப்புரம் நகரத் தலைவர் இராசேந்திரன், மாவட்ட திராவிட மாணவர் கழக பொறுப்பாளர் ம.தமிழ்பிரியன், சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர் சீ.அஜித் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட கழக தலைவர் சே.வ.கோபன்னா, மாவட்டச் செயலாளர் அரங்க.பரணிதரன் ஆகியோர் கூட்டங்களில் தொடக்க உரையாற்றினார்கள்.
திராவிட மாணவர் கழகம் மாநில இணைச் செயலாளர் நாகை மு.இளமாறன், தந்தை பெரியார் அவர்களால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களையும், திராவிடர் கழகத்தின் கொள் கைகளை விளக்கியும், திராவிட மாணவர் கழகத்தில் மாணவர்கள் இளைஞர்கள் இணைய வேண்டும் ஏன் என்பது குறித்தும், தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாள் செய்தியாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்ட 2026 தேர்தல் லட்சியப் போரில் ‘திராவிட மாடல்’ ஆட்சியை மலரச் செய்வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் விழுப்புரம் நகரச் செயலாளர் அ.சதிஷ் நன்றி உரையாற்றினார். மாவட்ட துணை செயலாளர் இரமேஷ், கண்டாச்சிபுரம் சிவராமன், இராதா மணாளன் உள்ளிட்ட கழகத் தோழர்களும், விழுப்புரம் சட்டக் கல்லூரி மாணவர்கள் கனியமுதன், விஷ்வா, ரகுநாத், செந்தில்குமார், சேசாத்திரி, தசரதன் உள்ளிட்ட பலரும், பொதுமக்களும் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.
