சென்னை, ஏப். 27- வள்ளலார் முப்பெரும் விழா மற்றும் தொடர் உணவுக் கொடைக்கான அரசு மானியமாக ரூ.3.25 கோடிக்கான காசோலையை விழா குழு தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு 25.4.2023 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த 2022-_20-23ஆம் ஆண் டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி, வள்ளலாரின் முப் பெரும் விழாவை 2022 அக்டோபர் முதல் 2023 அக்டோபர் வரை52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் கொண்டாடும் வகையில் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் தலை மையில் 14 உறுப்பினர்களை கொண்ட சிறப்புக் குழு அமைக்கப் பட்டது.
கடந்த 2022 அக்.5ஆம் தேதி நடைபெற்ற முப்பெரும் விழாவின் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ‘வள்ளலார் – 200’ இலச்சினை, அஞ்சல் உறை, சிறப்பு மலரை வெளியிட்டார். 52 வார விழாக்களில் முதல்வார நிகழ்ச்சிகளையும், ஆண்டு முழுவதும் உணவுக் கொடை வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் பேசும்போது, ‘‘பல்வேறு நகரங்களில் வள்ளலார் முப்பெரும் விழாவை 52 வாரங்க ளுக்கு சிறப்பாகக் கொண்டாட ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. ஓராண் டுக்கு தொடர் உணவுக் கொடை, பேச்சாளர்களுக்கு சன் மானம் உள்பட இந்த விழாவுக்கு ரூ.3.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.
அதன்படி, தமிழ்நாடு முழுவ தும் வள்ளலாரின் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு நாள் தோறும் 150 பேருக்கு உணவுக் கொடை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முப்பெரும் விழா மற்றும் தொடர் உணவுக் கொடை செலவுக்காக அரசு மானியம் ரூ.3.25 கோடிக்கான காசோலையை வள்ள லார் முப்பெரும் விழா சிறப்பு குழு தலைவர்கிருஷ்ணராஜ் வானவராயரி டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலை மைச் செயலர் வெ.இறையன்பு, சுற் றுலா துறை செயலர் பி.சந்திர மோகன், அறநிலையத் துறை ஆணையர் க.வீ.முரளீதரன், வள்ள லார் முப்பெரும் விழா சிறப்புகுழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.