ஜப்பானின் அய் ஸ்பேஸ் என்ற அரசு நிறுவனம் நிலவில் சென்று ஆய்வு செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது, இதற்காக பல்வேறு வகையில் ஆய்வுக் கலன்களை அனுப்பி வருகிறது. அதில் ஒன்று நிலவின் மேற்பகுதியில் இறங்கி ஆய்வு செய்யும் ஆய்வுக்கலன் ஆகும்
இதற்காக அய்க்கிய அரபுநாடு இரண்டு மீட்டர் உயரமுள்ள ஆய்வுக்கலனை தயார் செய்தது. ஜப்பானிலிருந்து கொண்டு செல்லப் பட்ட ரோபோ ஒன்றும் அதில் பொருத்தப்பட்டது.
நிலவில் இறங்கி அங்கிருந்து தகவல்களைச் சேகரிக்கும் பணியில் அவை ஈடுபடும். நான்கு மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய அந்தப் பயணம் கடைசி நேரத்தில் நிலவின் ஈர்ப்பு விசை காரணமாக அது தரை இறங்கும் போது வேகம் கூடி தரையில்வேகமாக சென்று மோதியுள்ளது.
பின்னர் அதிலிருந்து தகவல் தொடர்பு முடிவிற்கு வந்தது. இது ஒரு சோதனை ஓட்டம் மட்டுமே என்று கூறியுள்ள ஜப்பான் மற்றும் அய்க்கிய அமீரகம் அடுத்த முறை சில மாற்றங்கள் மற்றும் இதிலிருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் மூலம் அடுத்த ஆண்டு மீண்டும் நிலவில் இறங்கத் திட்ட மிடுகிறோம் என்று கூறியுள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இதுவரை நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை இறக்கியுள்ளன. 2019 இல் இஸ்ரேலிய நிறுவனம் ஒன்று நிலவில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள முயன்றது. இறுதிக் கட்டத்தில் அதன் விண்கலம் சிதறிப்போனது.