இதுதான் பிஜேபி ஆட்சி! ஊட்டச்சத்து குறைபாட்டில் தவிக்கும் ‘குஜராத் மாடல்’ 3.21 லட்சம் குழந்தைகள், 78 சதவீதம் பழங்குடிப் பெண்களுக்கு பாதிப்பு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

காந்திநகர், டிச.30- மோடி 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ‘குஜராத் மாடல்’ என்ற பெயரில் பல் வேறு கட்டுக்கதைகளை அள்ளி விட்டு பிரதமர் பதவியில் அமர்ந்தார். ஆனால், அவர் பிரதமர் ஆன  பின்பு தான் “குஜராத் மாடல்” என்பது ஒன்றுக்கும் உதவாத “திவால்  நிலை மாடல்” என்று தெரியவந்தது.

இந்நிலையில், தற்போது குஜராத் மாடல் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டில் சிக்கித் தவித்து வருவது அம்பலமாகியுள்ளது.

குஜராத் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சமீபத்திய  தரவுகள், அம்மாநிலத்தில் குழந்தைகளும் தாய்மார்களும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அதில், 3.21  லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து  குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் குழந்தைகளின் உடல்  மற்றும் அறிவுசார் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல பழங்குடியினப் பகுதிகளில் 15 முதல் 49 வயதுடைய  பெண்களில் 78 சதவீதம் பேர் ரத்தசோகையினால் (Anaemia) பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளன.

ஜனனி சுரக்ஷா யோஜனா, கஸ்  தூர்பா போஷன், பிரதான் மந்திரி மாத்ரு சுரக்ஷா அபியான், பிரதான் மந்திரி மாத்ருவந்தனா யோஜனா மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குஜராத் அபியான் உள்ளிட்ட டஜன் கணக்கான (12க்கும்  மேற்ப்பட்ட திட்டங்கள்) ஊட்டச் சத்து மற்றும் தாய்வழி நலத் திட்டங்களை குஜராத் பாஜக செயல்படுத்துக்கிறது. இந்தத் திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் பணம்  ஒதுக்கப்படுகிறது. ஆனால், திட்டங்கள் காகிதத்தில் மட்டுமே உள்ளன.

குறிப்பாக கிராமங்கள், பழங்குடிப்  பகுதிகளில் ஊட்டசத்துப் பொருட்கள் விநியோகம் புறக்கணிக் கப்பட்டுள்ளன. இதனால் தான் ஊட்டச் சத்து குறைபாட்டில் குஜராத் மாநிலம் தவிக்கிறது. ஊழல் திட்டங்களுக்கு தொடர்ச்சியான நிதியுதவி இருந்த போதிலும் ஊட்டச்சத்து குறைபாடு ஏன்  அதிகமாக உள்ளன? என்று எதிர்க் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

சில அதிகாரிகளும் இடைத் தரகர்களும் நலத்திட்டங்களை லாபக்  குழாய்களாக மாற்றியுள்ளனர். இதனால் பழங்குடியினப் பெண்கள் மற்றும் குழந்தைகள் சலுகை களிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான திட்டங்கள் பயனாளிகளைச் சென்றடைவதற்குப் பதிலாக மோசடிகளாக மாறி வரு கிறது என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோஷி குற்றம்சாட்டியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *