மதக்கலவரம் செய்பவர்களுக்கு தமிழ்நாட்டில் சம்மட்டி அடி கொடுப்பவர் நமது முதலமைச்சர் மகளிர் அணி மாநாட்டில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேச்சு

8 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பல்லடம், டிச. 30– அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு சம்மட்டி அடி தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என்று பல்லடத்தில் நடைபெற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள காரணப்பேட் டையில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்கிற பெயரில் திமுக மகளிரணியின் மேற்கு மண்டல மாநாடு நேற்று (29.12.2025) நடைபெற்றது. இந்த மாநாட்டில் 6 மாவட்டங்களைச் சேர்ந்த 1.5 லட்சம் மகளிரணியினர் பங்கேற்றுள்ளனர்.

இம்மாநாட்டிற்கு தலைமையேற்று நாடாளுமுன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆற்றிய உரை வருமாறு:–

“வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாநாட்டில் கலந்துகொண்ட திராவிட மாடல் ஆட்சியின் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், ‘Uncontrollable Chief Minister M.K. Stalin’ என்று பாராட்டப்படவும், பாராட்டக்கூடிய, சிலர் அச்சப்படக்கூடிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் வணக் கங்கள்.

மேற்கு மண்டலத்தில் தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டு வரும் செந்தில் பாலாஜிக்கு, மகளிரணி சார்பில் ஒரு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு சிறப்பாக இவ்வளவு நேர்த்தியாக வரக்கூடிய மகளிர் பாதுகாப்பாக பங்கேற்க, இவ்வளவு சிறப்பாக ஒரு மாநாட்டை நடத்திக்கொண்டு இருக்கிறார், அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய மகளிர் அணியைச் சேர்ந்த சகோதரிகள் தொடர்ந்து என்னிடம் சொல்லிக்கொண்டிருப்பது, “ஒரு முகச்சுளிப்பும் இல்லாமல், இன்முகத்தோடு எங்களை வரவேற்று, அன்போடு நடத்துகிறார்” என்பதுதான். அதற்காக என் நன்றியை மீண்டும் ஒருமுறை தெரிவிக்கிறேன்.

தமிழ்நாடு

அன்பைப் பொழிந்த
முத்தமிழறிஞர் கலைஞர்!

தம்பி என்று சொன்னால் தங்கை களை விட்டு விடுவோம் என்ற காரணத் திற்காக, தோழர்களே தோழியரே என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது என்ற காரணத்திற்காக, ‘உடன்பிறப்பே உடன்பிறப்பே” என்று தன் நெஞ்சத்து அன்பை எல்லாம் கொட்டி நம் மீது அன்பைப் பொழிந்த தலைவர் கலைஞர் அவர்களுடைய அன்பு உடன்பிறப்புகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடுவானம் தோற்றுவிடும் அள விற்கு கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் கருப்பு சிவப்பால் எங்களுடைய கண்களை குளிர்வித்து கொண்டிருக்கும், என்னுடைய மகளிரணி சகோதரிகள் அனைவருக்கும் நன்றியை உரித்தாக்கிக் கொள்ள விரும்புகிறேன்.

“வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற இந்த மாநாட்டிற்கு என்ன காரணம் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒன்று நமக்கான ஒரு ஆட்சியை பெண்களுக்கான ஒரு ஆட்சியை பெண்களின் எதிர்காலத்தை பெருமைப்படக்கூடிய ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்க கூடிய நம்முடைய முதலமைச்சாருக்கு நன்றி சொல்லக் கூடிய மாநாடு.

முதலமைச்சரின் பின்னால் மகளிர் – வெளிப்படுத்தும் மாநாடு!

அடுத்து எங்களுடைய ஆட்சி பெண்களுக்கான ஆட்சி, பெண்களின் எதிர்காலத்திற்கான ஆட்சியை மறுபடியும் தரக்கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கு, உங்கள் பின்னால் நாங்கள் நிற்கிறோம் என்று வெளிப்படுத்தும் மாநாடு.

“ஏன் முதலமைச்சருக்கு அரசியல மைப்பு சட்ட புத்தகத்தை பரிசாக வழங்கினோம்?” என்று சிலர் கேட்கலாம். அதன் முகப்பில் எழுதப்பட்டிருப்பது We the People (மக்களாகிய நாம்). இந்த மேடையில் இருக்கும் மகளிராகிய நாங்கள், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல; இந்த நாட்டின் எதிர்காலத்தையே உங்கள் கைகளில் ஒப்படைக்கிறோம்.

நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு சொல்லும் செய்தி Justice, Equality, Fraternity, and Liberty. இதை பாதுகாக்க வேண்டும் என்பதுதான். அந்த நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை காப்பாற்றக்கூடிய ஒரே முதலமைச்சர் என்ற நம்பிக்கையை நாம் மட்டுமில்லை, இந்த நாடே அவர் மீது வைத்திருக்கிறது.

அதனால்தான் “பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் அண்ணா” என்று அந்த அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை உங்கள் கைகளில் தந்தோம். தமிழ்நாட்டை மட்டும் இல்லை, இந்த நாட்டை பாதுகாக்க வேண்டிய கடமை உங்கள் கைகளில் இருக்கிறது. ஏனென்றால் உங்கள் குரல் வந்த பிறகுதான், இந்த நாட்டில் உங்களுக்கு பின்னால்தான் ஒவ்வொரு குரலாக அங்கே இருக்கக்கூடிய பாசிச அரசுக்கு எதிராக எழக்கூடிய அத்தனை குரல்களும் உங்களுக்கு பின்னால் அணிதிரளக்கூடிய குரல்களாகத்தான் இன்று இருந்து கொண்டிருக்கிறது.

அதனால்தான் இந்த நாடு உங்களை நம்பி இருக்கிறது என்பதை நான் திரும்ப் திரும்ப் இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த மாநாட்டில் சில கருத்துகளை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாடு

இந்த ஆட்சி
பெண்களுக்கான ஆட்சி!

இந்த ஆட்சி பெண்களுக்கான ஆட்சி என்று நாம் சொல்கிறோம். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இன்று ஒரு கோடி 30 லட்சம் சகோதரிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய சகோதரிகளுக்கு தரப்படுகிறது. நம்மை பார்த்து நிறைய பேர் கேட்கிறார்கள், தேர்தல் நேரத்தில் வாக்குறுதி நிறைவேற்றினோமா என்று? இந்த ஒரு கோடி 30 லட்சம் சகோதரிகள் சொல்லுவார்கள் நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை சொல்வார்கள்.

அதேபோல், “புதுமைப் பெண்” திட்டம், “விடியல் பயணம்”, பெண்களுக் கான பாதுகாப்பான விடுதிகள். இவை அனைத்தும் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்துள்ளன.

பெருமையுடன் சொல்கிறேன், வேலைக்கு செல்லும் பெண்களில் 47 சதவீதம் பேர் உள்ள மாநிலம் தமிழ்நாடு. வேறு எந்த மாநிலத்திலும் இதற்கான வாய்ப்புகள் இவ்வளவு அளவில் உருவாக்கப்படவில்லை.

இந்த 47 சதவீதம் எதனால் சாத்திய மானது என்றால், அடிப்படை கல்வி வழங்கப்பட்டது, கல்லூரிக்கு செல்லும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன, மேலும் தமிழ்நாடு ஒரு பாதுகாப்பான மாநிலமாக உள்ளது என்பதால்தான். அதனால்தான் இந்தியாவிலேயே அதிக அளவில் வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

கோவை, கரூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,282 பேர் புத்தொழில் (Start–Up) தொழில்களைத் தொடங்கியுள்ளனர். ஆண்கள் வருத்தப்படக்கூடாது, இதில் 56 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை உறுதி செய்த ஆட்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான்.

தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி

“தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி இல்லை” என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், இந்தியாவில் உயர்கல்விக்கு செல்லும் பெண்களின் சதவீதம் 28% மட்டுமே. தமிழ்நாட்டில் அது 48%. தேசிய சராசரியை விட 20 சதவீதம் அதிகம். இது வளர்ந்த நாடுகளுக்கு இணையான அளவாகும்.

அதேபோல், படிக்கும் பெண்களுக்கும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் பாதுகாப்பான தங்குமிடம் வழங்க “தோழி விடுதிகள்” அமைக்கப்பட்டுள்ளன. பெண்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி செயல்படுகிறது.

துணை முதலமைச்சர் உதயநிதி பேசும்பொழுது சொன்னார், நமக்கு எதிரியாக இருக்கக்கூடிய சங்கி கூட்டம் அடிமைகள் கூட்டம் என்று, அவங்க இன்றைக்கு தமிழ்நாட்டை பார்த்து நம்முடைய ஆட்சி திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை பார்த்து பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஒரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் இரண்டு உதாரணங்களை மட்டும் சொல்ல விரும்புகிறேன். அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த கொடூர குற்றங்கள் எல்லோருக்கும் தெரியும். மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மகளிர் அணி அந்தப் போராட்டத்தை முன்னெடுத்தது. போராட்டத்திற்கு செல்வதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சாலையில் அமர்ந்து போராடிய பிறகுதான் போராட்டக் களத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.

காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் அச்சுறுத்தல்களுக்கும் தாக்குதல் களுக்கும் உள்ளானார்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்குப் பிறகு, நமது போராட்டத்தின் விளைவாகவே அந்த வழக்கு சிபிஅய்க்கு மாற்றப்பட்டது. நமது ஆட்சியில் அந்தப் பெண்களுக்கு நியாயம் கிடைத்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!

பாஜகவைச் சேர்ந்த ஒருவர், 2017ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். நீண்ட கால போராட்டத்திற்குப் பிறகே அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைத்தது. சமீபத்தில் அந்த குற்றவாளிக்கு பிணை வழங்கப்பட்டது. அதை எதிர்த்து போராடிய பெண்ணும் அவரது குடும்பத்தினரும் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டனர்; டில்லி தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டனர். இதுதான் பாஜக பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் லட்சணம்.

ஆனால் கோவையில் ஒரு பெண்ணுக்கு எதிரான ஒரு சம்பவம் நடந்தபோது, 30 நாளுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டார்; 30 நாளுக்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்யப்பட்டது. அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்க, யாரும் கேட்பதற்கு முன்பே முதல் ஆதரவு குரலாக எழுந்தது நமது முதலமைச்சரின் குரல்தான்.

இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், தினமும் குற்றச்சாட்டு களை அடுக்கினால் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று நினைப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம். நாம் உண்மையாகவே பெண்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு குறித்து கவலைப்படுகிறோம்.

தேர்தல் அறிக்கையை
பா.ஜ.க. நிறைவேற்றவில்லை!

பாஜக ஆட்சி பொறுப்பேற்கும் முன், ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் தருவோம் என்றார்கள். இன்று கிராமப்புற மக்களின் 100 நாள் வேலைக்கு கூட உலை வைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சியாக உள்ளது.

100 நாள் வேலை திட்டத்தை நிறுத்த துடிக்கக் கூடிய அந்த பாஜக வையை எதிர்த்து ஒரு வார்த்தை பேசி இருக்காங்களா? அதை எதிர்த்து தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் மட்டும்தான். இது தமிழ்நாட்டை மட்டும் பாதிக்க கூடியது இல்லை. நாடு முழுவதும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விஷயம்.

நாடு முழுவதும், கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும், அடிப்படை வருமானத்தையும், அவர் களுக்குக் கிடைத்திருந்த பொருளாதார பாதுகாப்பையும் அழித்தொழிக்கும் வகையிலான சட்டம் அங்கே நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கிறது.

இப்படி மக்களுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு, இந்த நாட்டில் ஆன்மீகத்தை அரசியலாக்கி, மதக்கலவரம், காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு ஆகியவற்றை உருவாக்கி அரசியல் செய்ய முயற்சிக்கும் பாஜகவிற்கு எதிராக, சம்மட்டி அடியாக நின்று போராடிக் கொண்டிருக்கும் முதலமைச்சரின் பின்னால் நாம் அனைவரும் அணிதிரளுவோம்.

இங்கே இருக்கக்கூடிய பெண்கள் அனைவரும் தலை நிமிர்ந்து நிற்கக் கூடியவர்கள். சிலர், “நாம் நமது பார்வையை உயர்த்தக் கூடாது; கூனி, குறுகி நிற்க வேண்டும்; அவர்களுக்கு வளைந்து கொடுக்க வேண்டும்; அவர்களின் முன்னால் நிற்கத் தகுதி இல்லை” என்று நினைக்கலாம். அந்த எல்லா எண்ணங்களையும் உடைத்து, துணிச்சலுடன் முன்னே வந்து நிற்கும் உறுதியை நமக்கு திராவிட இயக்கம் தந்திருக்கிறது; அதையே இன்று நமது திராவிட மாடல் ஆட்சி தந்திருக்கிறது.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *