தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது, திராவிடர் இயக்கத்தின் பற்றாளர் திருச்சி கே.சவுந்தரராசன் அவர்கள் சந்தித்து தனது புரட்சிப்பாதை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள 1.விடுதலை வேட்கை, 2.பிரபாகரன் காவியம் மற்றும் 3.Anna Speaks ஆகிய மூன்று நூல்களை அன்பளிப்பு வழங்கியுள்ளார்கள்.
அதனை அப்படியே தமிழர் தலைவரிடமிருந்து நூலகத்திற்கு பெற்றுக் கொண்டோம். நூலினை வழங்கியதற்கு நன்றியையும், வாழ்த்துகளையும் நூலகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். மிக்க நன்றி!
– நூலகர், பெரியார் ஆய்வு நூலகம்,
பெரியார் திடல்
