நியூயார்க், டிச.29- பொதுமக்கள், வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என அய்.நா. கண்டனம் தெரிவித்துள்ளது . சிரியாவில் மசூதி மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, அய்.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிரியாவின் ஹோம்ஸில் உள்ள அலி பின் அபி தாலிப் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்
பொதுமக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது . கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வேண்டும். இவ்வாறு அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.
