தூத்துக்குடி, டிச. 29– தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக கலந்துற வாடல் கூட்டம் நேற்று (28.12.2025) மாலை ஆறு மணிக்கு பெரியார் மய்யத்தில் உற்சாகம் பொங்க நடைபெற்றது.
மாவட்ட கழகத் தலைவர் மு.முனிய சாமி தலைமை வகித்தார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவு ரையாற்றினார். மாநகர செயலாளராக பொறுப்பேற்று சிறப்பாக தொண்டாற்றி காலமான சி.மணிமொழியன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
22.1.2026 அன்று தூத்துக்குடி வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பளிப்பது என்றும்,
தமிழர் திருநாள்விழா, இதுதான் ஆர்எஸ்எஸ் -பாஜக ஆட்சி இதுதான் திராவிடம் -திராவிடமாடல்ஆட்சி என்ற தலைப்பில் தொடர்பரப்புரை கூட்டம்,
பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் நிதி வழங்கும் விழாவை சிறப்பாக நடத்துவது, உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.
பெரியார் மய்யத்தில் உண்மை வாசகர்வட்டம் சார்பில் தொடர் நிகழ்ச்சி நடத்திவரும் காப்பாளர் மா.பால்இராசேந்திரம் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாவட்டச்செயலாளர் கோ.முருகன், மாவட்ட துணைத்தலைவர் இரா.ஆழ்வார், மாவட்டப.க.செயலாளர் சொ.பொன்ராசு,பெரியார்பெருந்தொண்டர்கள் கலைச்செல்வன், கி.கோபால்சாமி, திமுக கலை இலக்கிய அணி பொறுப்பாளர்.போ.அன்பழகன், அ.பார்த்தசாரதி, பி.இராமசெல்வேந்திரன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். அறிவாசான் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார்,ஆகியோரால் கட்டி காப்பாற்றப்பட்ட இயக்கத்தை பல்வகை நெருக்கடிகளையும் தாண்டி இன்று உலகம் முழுதும் கொண்டுசென்றுள்ள ஆசிரியர் அவர்களது அருந்தொண்டிற்கு நன்றி காட்டும் வகையில் ஒவ்வொருவரும் செயலாற்ற வேண்டுமென கேட்டு கொண்டார் காப்பாளர் மா.பால் இரசேந்திரம்,
செல்லத்துரையின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.
