நாகர்கோவில், டிச.29 நாகர்கோவிலில் தமிழர் தலைவர் பங்கேற்கும் ‘பெரியார் உலக’ம் நிதி வழங்கும் விழாவினை நடத்த குமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (28.12.2025) நாகர்கோவில், ஒழு கினசேரி பெரியார் மய்யத்தில், மாவட்டத் தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில் உற்சாகமாக நடை பெற்றது. கழக மாவட்டச் செய லாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் சிறப்புரையாற்றினார்.
கழகக் காப்பாளர் ம.தயாளன், மாவட்ட துணைத்தலைவர் ச.நல்ல பெருமாள், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ. சிவதாணு ஆகியோர் முன்னிலை வகித்து உரை யாற்றினர்.
மாவட்ட துணைச் செயலா ளர்கள் எஸ்.அலெக்சாண்டர், சி.அய்சக்நியூட்டன், குமரி நகர கழக செயலாளர் க.யுவான்சு, தோழர்கள் மு.பால்மணி, பிரகாஷ், பெருமாள் மற்றும் பலரும் பங்கேற்றனர். அகவை 93 காணும் தமிழர்தலைவர் ஆசிரியருக்குப் பிறந்த நாள் வாழ்த்து கள் தெரிவிப்பது, ஜனவரி 22 இல் நாகர்கோவில் மாநகரில்,இதுதான் ஆர்.எஸ்.எஸ் பாஜக – இதுதான் திராவிடம், திராவிட மாடல், பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா அரங்கக் கூட்டத்தினை எழுச்சிகரமாக நடத்துவது, அந்தக் கூட்டத்தில் பங்கேற்க வரும் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்க ளுக்கு, மாவட்ட கழகம் சார்பாக உற்சாக வரவேற்பு வழங்குவது, சென்னையில் நடைபெற்ற கழகத் தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானங்களை முழுமனதாக வரவேற்று குமரிமாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்துவது போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கழக மாவட்ட இளைஞரணி தலைவர்
இரா.இராஜேஷ் நன்றி கூறினார்.
