ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பிற்கு தமிழ்நாடு ஆற்றும் எதிர்வினை இதுதான் சு. வெங்கடேசன் எம்.பி…!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

தனித்தமிழ் இயக்கத்தின் 110 ஆவது ஆண்டு விழாவில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்
சு. வெங்கடேசன் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர், குறிப்பிடுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிந்தி, ஆங்கிலம் அல்லாத மொழியில் அதிகமாக உரை நிகழ்த்தியது இந்த கூட்டத் தொடரில்தான் என்று குறிப்பிட்டுள்ளதோடு, அதில் அதிகமாக உரை நிகழ்த்தப்பட்ட மொழி தமிழ் என்று கூறியுள்ளார்.

சுதந்திர இந்திய வரலாற்றில் ஒரு கூட்டத் தொடரிலேயே அய்ம்பது உரைகள் தமிழிலே நிகழ்த்தப்பட்டது இந்த குளிர்கால கூட்டத் தொடரில் தான் என்று தெரிவித்துள்ளார். இதுதான் ஹிந்தி திணிப்பிற்கும், சமஸ்கிருத திணிப்பிற்கும் தமிழ்நாடு ஆற்றும் எதிர்வினை என்று
சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

 

பண்பாட்டுத் தளத்தில் ஒரு பாய்ச்சல்!

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் திருக்குறள் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை மாநிலம் முழுவதும் நடத்த அரசாணை

சென்னை, டிச.28 ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் திருக்குறள் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை மாநிலம் முழுவதும் நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருக்குறள் சார்ந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க சிறப்பு பணி அலுவலராக வீ.ப.ஜெயசீலன் நியமனம்; திருக்குறள் சார்ந்த நிகழ்வுகளை நடத்த ரூ.80 லட்சம் ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

தமிழ்நாடு முழுவதும் 196 மய்யங்களில்

அரசு கல்லூரி உதவி பேராசிரியர்
42,000 பேர் தேர்வு எழுதினர்

 தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு நேற்று (27.12.2025) மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றது. 196 தேர்வு மய்யங்களில் சுமார் 42,000 விண்ணப்பதாரர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு நடைபெறுவதால், தகுதியானவர் களுக்கு அரசுப் பணி கிடைக்கும் என்ற பெரும் எதிர் பார்ப்பு நிலவுகிறது. வினாத்தாள்கள் தரமான முறையில் இருந்ததாகத் தேர்வர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

புகார் வரவில்லை என மழுப்பலா?

 கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களில் காவல்துறை உயரதிகாரிகளின் பதில்

ஜபல்பூர், டிச.28 இந்தியாவில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் நாள் மற்றும் அதற்கு முன்பாக பாஜக ஆளும் ராஜஸ்தான், அரியானா, உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், மகாராட்டிரா, அசாம்,மற்றும் தலைநகர் புதுடில்லி உள்ளிட்ட மாநிலங்களில் கிறிஸ்தவ மக்கள், கிறிஸ்தவ பள்ளிகள், கிறிஸ்தவ கோயில்கள் மற்றும் கிறிஸ்மஸ் அலங்காரங்களைக் கொண்ட பெரிய வணிக வளாகங்கள் தாக்கப்பட்டனர்.

பஜ்ரங் தள், விசுவஹிந்துபரிஷ, ஹிந்து ரக்ஷா சமிதி உள்ளிட்ட அமைப்புகள் இந்த தாக்குதலில் பின்னணியில் இருந்தன.

இந்தியாவில் தற்போதுவரை 400க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் மீதான தாக்குதல் காணொலிகள் சமூகவலைதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன.

மத்தியப் பிரதேசம், ஜபல்பூரில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி கூறியதாவது: எனது உரிமை நான் கிறிஸ்தவனாக மாறினேன் நாளை எனக்குப் பிடிக்கவில்லை என்றால் மீண்டும் ஹிந்துவாக மாறுவேன்; நீ யார் என்னைக் கேள்வி கேட்க என்று ஜபல்பூர் நகர்மன்ற உறுப்பினர் பாஜகவைச் சேர்ந்த பெண்ணிடம் துணிச்சலுடன் கேட்டார்.

அதற்கு அந்தப் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணை காவல்துறை முன்னிலையிலேயே கன்னத்தில் அறைந்தார்.

இவ்வளவு நடந்தும் பல்வேறு மாநில காவல்துறை இயக்குநர்கள் ஊடகவியலாளர்களுக்குப் புத்தாண்டு விருந்து அளித்த போது, சில ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டபோது இது போன்ற தாக்குதல் தொடர்பாக இதுவரை எங்களுக்கு யாரிடமிருந்தும் புகார் வரவில்லை; புகார் வரும் பட்சத்தில் நாங்கள் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்போம் என்று ஒரே வரியில் கூறிவிட்டார்கள்.

உயர்கல்வியில் சட்டப்பூர்வ
ஆய்வுக்கு வலியுறுத்தல்

சென்னை, டிச.28 உயர்கல்வி துறையில் சிறந்து விளங்கும் சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் சம்பந்தப்பட்ட எந்தவொரு தகவலையும் இந்நிறுவனத்துடன் உடன் சம்மதத்தைப் பெறாமல் அல்லது அதன் விளக்கம், கருத்து மற்றும் மறுப்பை நியாயமான முறையில் ஆவணப்படுத்தாமல் இந்தியா ரிசர்ச் வாட்ச்  வெளியிடுவதற்கோ, பரப்புவதற்கோ இடைக்காலத் தடையாணை சென்னை உயர்நிதிமன்றம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

கட்டாயத் தடை உத்தரவு தொடர்பான விவகாரம், விசாரணையின் நிறைவுக்குப் பிறகு, ஆதாரங்கள் முழுமையாகத் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் ஆய்வு செய்யப்படும் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

கல்விசார் ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மை, மற்றும் சட்டப்பூர்வ ஆய்வு ஆகியவற்றில் தனது உறுதிப்பாட்டை இந்நிறுவனம் மீண்டும் வலியுறுத்துகிறது. மேலும், தேர்ந்தெடுத்த வெளிப்படுத்தல், பொருள் சார்ந்த உண்மைகளை மறைத்தல், மற்றும் ஒருதலைப்பட்சமான வெளியீடுகள் ஆகியவை நியாயமான கருத்து அல்லது பொறுப்புள்ள கருத்துச் சுதந்திரத்தின் பாதுகாப்பைக் கோர முடியாது என்பதையும் இந்நிறுவனம் உறுதிப்படுத்துகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *