சென்னை, டிச.28 கோவை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கணவரைப் பிரிந்து, தனது 14 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அப்பகுதியில் வசித்து வந்த மற்றொரு நபருக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. 2017-ல் அந்த நபர் மகள் உறவு முறை கொண்ட, 10-ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்துள்ளார்.
இது தொடர்பாக அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரி வித்தபோது, “இதை வெளியே சொன்னால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று தாய் மிரட் டியுள்ளார். அதன் பிறகும் தொடர்ந்து அந்நபர் சிறுமிக்கு பாலியல் ரீதியாக வன் கொடுமை செய்து வந்துள்ளார். மேலும், “இதை வெளியே சொன்னால் ஆசிட் வீசிவிடுவேன்” என்றும் மிரட்டியுள்ளார்.
அந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் சிறுமியின் தாயார் மற்றும் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த நபர் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக் குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கோவை போக்சோ சிறப்பு நீதி மன்றம், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2022-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் பி.வேல் முருகன், எம். ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தாயாரின் ஒழுக்கமற்ற நடத்தைக் குறைவால், பெற்ற குழந்தைகளுக்கும் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் நிகழ்வது சமூகத்தில் அன் றாடம் நிகழும் கசப்பான நிகழ்வாகி விட்டது.
நமது கலாச்சாரத்தில் எல்லாவற்றுக்கும் மேலாக பெற்ற தாய்க்குத்தான் முதலிடம் கொடுக் கிறோம். பெற்ற குழந்தைகளை பாதுகாப்புடன், கண்ணியமாக, ஒழுக்கமாக வளர்ப்பது தாயின் கடமை. அந்த கடமையை தாய் கைவிட்டுவிட் டால், அந்தக் குடும்பம் மட்டு மின்றி, இந்த சமூகமும் தனது அடித்தளத்தை இழந்துவிடும்.
இந்த வழக்கில் பெற்ற மகள் என்றும் பாராமல், தன்னால் அந்த சிறுமிக்கு ஏற்பட்ட வன்கொடுமையை தட்டிக்கேட் காமல் அந்தப்பெண், காமுக எண்ணம் கொண்ட நபருக்கு உடந்தையாக இருந்துள்ளார். இந்த வழக்கில் இருவருக்கும் சரியான தண்டனையைத்தான் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதில் தலையிட எந்த காரணமும் இல்லை என்பதால், இருவரது ஆயுள் தண்டனையை உறுதி செய்கிறோம்” என்று உத்தரவிட்டுள்ளனர்.
