தாம்பரம், டிச.28 தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (50), இவர், பாஜக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக பதவி வகிக் கிறார். இவருக்கும். மணிமங்கலத்தை சேர்ந்த பாஜக மாநில இளைஞரணி துணை தலைவராக பதவி வகிக்கும் அமர்நாத் (32), என்பவருக்கும் கட்சி ரீதியாக முன் விரோதம் உள்ளது.
இந்நிலையில், சிறீபெரும்புதூர் தொகுதியில் பாஜக வாக்குச்சாவடி முகவர்களுக்கு, பாஜக தலைமை வழங்கிய பணத்தை செல்வமணி முறையாக பிரித்து கொடுக்காமல் முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அமர்நாத் கடந்த 25-ஆம் தேதி செல்வமணியிடம் கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து,அன்றுஇரவுஅமர் நாத்தின் ஆதரவாளரான குன்றத்தூர் ஒன்றிய பாஜக பொருளாளர் பிர காஷ் (28) மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் செல்வமணி வீட் டிற்கு மதுபோதையில் சென்று தகராறு செய்து அவரது கார் கண் ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவத்தில், பிரகாஷ் உள்ளிட்ட 5 பேரை மணிமங்கலம் காவல்துறையினர் கைது செய்தனர். தலை மறைவாக உள்ள அமர்நாத்தை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், கட்சியின் கட்டுப் பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயலிலும் ஈடுபட்டதால் அமர்நாத் வகித்து வரும் அனைத்துக் கட்சி பொறுப்புகளில் இருந்து உடனடியாக விடுவிக்கப்படுகிறார் என, பாஜக இளைஞர் அணி மாநில தலைவர் சூர்யா அறிக்கை வெளியிட்டார்.
இதற்கிடையே, கட்சிபொறுப்பில் இருந்துநீக்கப்பட்ட அமர்நாத்நேற்று காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், 2021 சட்டப்பேரவை தேர்தலின் போது கட்சி தலைமை வழங்கிய பணத்தை நிர்வாகிகளுக்கு கொடுக்காமல் செல்வமணி எடுத்து கொண்டார். இதுகுறித்து, நான் கேட்டபோது அலுவல கத்திற்கு வரவழைத்து என்னை தாக்கினார்.
தற்போது வாக்குச்சாவடி முகவர் களுக்கு கட்சித் தலைமை கொடுத்த பணத்தையும் செல்வமணி எடுத்துக் கொண்டார். நான் வாட்ஸ் ஆப் குழுவில் இதுகுறித்து பதிவிட்டேன். இதனால் கட்சி நிர்வாகிகள் முன்னி லையில்செல்வமணி என்னை ஆபாசமாக பேசி திட்டினார். இதை அறிந்த என் மீது பாசம் வைத்துள்ளவர்கள். செல்வமணியிடம் நியாயம் கேட்கச் சென்றபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
