சென்னை, டிச. 28– தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் வரும் ஜனவரி 10-ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்து முடிக்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று (27.12.2025) செய்தியாளர் களைச் சந்தித்த அமைச்சர் காந்தி, பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசால் வழங்கப்படவுள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது, பொங்கல் தொகுப்பிற்கான அனைத்துப் பொருட்களும் தற்போது தயார் நிலையில் உள்ளதாகவும், விநியோகப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்தப் பொங்கல் தொகுப்பானது எவ்வித பாகு பாடுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் (Ration Card Holders) முழுமையாகச் சென்றடையும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனவரி 10-ஆம் தேதிக்குள் அனைத்து ரேசன் கடைகளிலும் விநியோகம் நிறைவடையும். அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கும் இந்தப் பரிசுத் தொகுப்பு கிடைக்கும். பொருட்கள் அனைத்தும் தரமான முறையில் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பொங்கல் விழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அமைச்சரின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
