உலகச் செய்திகள்

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

உயிர்காக்கும் மருந்திலும் போலி

இந்தியாவில் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி:
ஆஸ்திரேலியா விடுத்துள்ள எச்சரிக்கை

மெல்போர்ன், டிச. 28– 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு இந்தியா சென்று, அபயரெப் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு கிடைத்திருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தியத் தடுப்பூசி நிறுவனத்தால், போலி வெறிநாய்க்கடி மருந்துகள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது, உண்மையான மருந்தின் தொடர் எண்களைக் (Batch Number) கொண்ட போலி மருந்துகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வெளியானது. தற்போது ஆஸ்திரேலியா விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில், 2023ஆம் ஆண்டு இறுதியிலிருந்தே போலி மருந்துகள் புழக்கத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெறிநாய்க்கடிக்குச் சிறந்த மருந்து என உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற ‘அபயரெப்’ பெயரில், வேதியியல் மாற்றங்கள் மற்றும் சிப்பம் (Packaging) ஆகியவற்றில் சிறு மாற்றங்களுடன் இந்தப் போலி மருந்துகள் விற்பனைக்கு வருகின்றன. டில்லி, மும்பை, அகமதாபாத், லக்னோ உள்ளிட்ட நகரங்களில் போலி மருந்துகளின் விற்பனை அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இருப்பினும், இந்த மருந்துகள் நாடு முழுவதும் எந்த அளவிற்குப் புழக்கத்தில் உள்ளன என்பது குறித்த உண்மையான விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘ரேபிஸ்’ வைரஸ் பரவினால், அது நரம்பு மண்டலத்தைத் தாக்கி மரணத்தை விளைவிக்கும். எனவே, போலி மருந்துகளைச் செலுத்திக்கொண்டவர்களுக்கு ரேபிஸ் வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்படுகிறது. அதே வேளையில், தனிநபர்களால் போலி மருந்துகளைக் கண்டறிவது கடினம் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை கூறியிருப்பதாவது: “இந்தியாவில் 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப் பிறகு யாரேனும் அபயரெப் தடுப்பூசியோ அல்லது பெயர் தெரியாத வேறு தடுப்பூசிகளோ செலுத்திக்கொண்டிருந்தால், உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

இனி இந்தியா செல்லத் திட்டமிட்டிருப்பவர்கள், தகுந்த வெறிநாய்க்கடி தடுப்பூசிகளை முன்கூட்டியே செலுத்திக்கொண்டு புறப்பட வேண்டும்; ஒருவேளை இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள நேர்ந்தால், அந்த மருந்தின் குப்பி மற்றும் மருந்துச் சீட்டைப் (Prescription) ஒளிப்படம் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், தெருநாய்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா சுகாதாரத் துறையால்  அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தால்
நோயாளிகள் பெரிதும் பாதிப்பு

சிம்லா, டிச. 28– இமாச்சல் தலைநகர் சிம்லாவில் இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமைன செயல்படுகிறது. அங்கு கடந்த 22ஆம் ேததி அர்ஜுன் சிங் என்ற மருத்துவப் பயனாளிக்கும், மருத்துவர் ராகவுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கிகொள்ளும் காணெலி சமூக வைலதளங்களில் பரவி அதிர்வைலகைள ஏற்படுத்தியது. இதுகுறித்து இமாச்சல பிரதேச அரசு விசாரித்து மருத்துவர் பணி நீக்கம் ெசய்தது. இந்த சூழலில் பணி பாதுகாப்பு ேகாரி இமாச்சல பிரதேசம் முழுவதும் அரசு மருத்துவர்கள் ேநற்று காலவரையயற்ற ேவலை நிறுத்தத்ைத தொடங்கினர். இதனால் இமாச்சலபிரேதசம் முழுவதும் ஆயிரக்கணக்கான மருத்துவப் பயனாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.

மணிக்கு 700 கி.மீட்டர் வேகத்தில்
ரயிலை இயக்கி சாதனை படைத்த சீனா

உலக செய்திகள்

பெய்ஜிங், டிச. 28– சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ‘மேக்னெடிக் லெவிடேஷன்’ எனப்படும் காந்தப்புல தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 1 டன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனை நடத்தினர். இதில் வெறும் 2 விநாடிகளில் அந்த ரயில் மணிக்கு 700 கி.மீ. வேகத்தை எட்டி உலக சாதனை படைத்தது.

400 மீட்டர் (1,310 அடி) நீளமுள்ள காந்தப்புல ரயில் பாதையில் இந்த சோதனை நடத்தப்பட்டது, மேலும் 700 கி.மீ. வேகத்தை அடைந்த பிறகு ரயில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. இதன் மூலம் இதுவரை உருவாக்கப்பட்ட காந்தப்புல ரயில்களில் அதிக வேகம் கொண்ட ரயில் என்ற பெருமையை இது பெற்றது.

இந்த ரயில், தண்டவாளங்களைத் தொடாமல், அதன் மேலே காந்த விசையில் செல்லக்கூடியது. இதன் முடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு ராக்கெட்டை ஏவும் அளவு சக்தி வாய்ந்தது. இந்த வேகத்தில் நீண்ட தொலைவில் உள்ள நகரங்களை சில நிமிடங்களில் இந்த ரயில்கள் மூலம் நாம் இணைக்க முடியும். இந்த சாதனையை படைத்த ஆராய்ச்சியாளர்கள் குழு கடந்த 10 ஆண்டுகளாக இந்தத் திட்டத்தில் பணியாற்றி வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *