28.12.1933இல் ஈரோட்டில் தனது வீட்டில் சுயமரியாதைத் தொண்டர்களைக் கூட்டி ‘சமதர்மத் திட்டத்தை’ வெளியிட்டார்.இது “ஈரோட்டு பாதை” எனவும் அறியப்படும். தன்னுடைய சுய மரியாதை இயக்கத்தில் சமதர்மப் பிரிவு என ஒன்றை ஆரம்பித்து தமிழ்நாடெங்கும் சமதர்மச் சங்கங்களைத் துவக்கினார். மே தினம் சமதர்மப் பெருநாள் என தமிழ்நாடு முழுவதும் சுய மரியாதை இயக்கத்தாரால் கொண்டாடப்படும் என தந்தை பெரியார் அறிவித்தார்.
தந்தை பெரியாரும் சிங்காரவேலரும் இணைந்து ஏழு அம்ச ஈரோடு சமதர்ம திட்டத்தை வகுத்தனர்.
அவை பின்வருமாறு:
- பிரிட்டிஷ் உள்பட அனைத்துவிதமான முதலாளித்தன்மை கொண்ட ஆட்சியிலிருந்தும் இந்தியாவை முழுமையாக விடுதலை அடைய செய்வது.
- தேசத்தின் பெயரால் கொடுக்கப்பட வேண்டிய எல்லாக் கடன்களையும் ரத்து செய்வது.
- எல்லா தொழிற்சாலைகளையும், வங்கிகளையும், ரயில், கப்பல், படகு நீர்வழி உள்பட அனைத்து போக்குவரத்து சாதனங்களையும் பொது மக்களின் உரிமை ஆக்குவது.#பொதுவுடைமையாக்குவது.
- எல்லா விவசாய நிலங்களையும் காடுகளையும் மற்றும் தாவர சொத்துக்களையும் பொது ஜனங்களுக்கு உரிமை ஆக்குவது.
- குடியானவர்களும், தொழிலாளிகளும் பட்டிருக்கும் கடன்களையும் அடிமை ஒப்பந்தங்களையும் ரத்து செய்து விடுவது.
- சுதேச சமஸ்தானங்களை எல்லாம் மாற்றி இந்தியா முழுவதையும் தொழிலாளிகள், குடியானவர்கள், உடல் உழைப்பு செய்யும் வேலைக்காரர்கள் ஆகியவர்களுடைய நேரடியான ஆட்சிக்குக் கொண்டு வருவது.
- தொழில் செய்பவர்கள் 7 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யக்கூடாது என்பதுடன், அவர்களுடைய வாழ்க்கை நிலை உயர்த்தப்பட வேண்டும்.
தொழிலாளிகளுக்குக் கூலியை உயர்த்தி, அவர்களது நல வாழ்க்கைக்கு வேண்டிய சௌகரியங்களை செய்ய வேண்டும். இலவச நூல்நிலையங்கள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு வசதிகளை ஏற்படுத்துவது மற்றும் தொழில் இல்லாமல் இருக்கின்றவர்களுக்கு அரசு சமூக பாதுகாப்பை (#socialsecurity) உறுதிப்படுத்துவது ஆகிய இவை யாவும் #சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படையான லட்சியங்கள் ஆகும்.
