கைப்பேசியில் இதை மாற்றினால் 3 ஆண்டு சிறை
கைப்பேசிகளில் 15 இலக்க IMEI நம்பர் உள்ளிட்ட அடையாளங்களை மாற்றுவது பிணையில் வெளிவர முடியாத குற்றம் என தொலைத்தொடர்புத் துறை(DoT) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை (அ) ₹50 லட்சம் அபராதம் (அ) இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இது தொடர்பாக செல்பேசி தயாரிப்பு நிறுவனங்கள், விற்பனை மய்யங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களும் இந்த விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.
பேரிடர்களால் ரூ.10.77 லட்சம் கோடி இழப்பு
2025இல் இயற்கைப் பேரிடர்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. வெப்ப அலைகள், காட்டுத் தீ, வெள்ளம் ஆகியவையால் ₹10.77 லட்சம் கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டதாக, காப்பீடு செய்யப்பட்ட இழப்பு மதிப்பீடுகளின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது. இந்த துயரங்களுக்கு, புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டால் ஏற்படும் காலநிலை மாற்றமே காரணம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். கலிபோர்னியா காட்டுத் தீயால் மட்டும் ₹5.38 லட்சம் கோடி இழப்பு.
வெளிநாடு சென்றாலும் த.வெ.க. திருந்தாதோ?
மலேசியாவில் நடைபெற்று வரும் ஜனநாயகன் படப் பாடல்கள் வெளியீட்டில் தவெக கொடியை காட்டிய ரசிகர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். திரைப்பட நிகழ்ச்சி என்பதால், அரசியல் சார்ந்த எந்த விசயங்களும் இடம்பெறக் கூடாது என மலேசிய காவல்துறையிர் கட்டுப்பாடு விதித்திருந்தது. இதனை மீறி நிகழ்ச்சியில் பலரும் தவெக, தவெக என முழக்கம் எழுப்பினர். இந்நிலையில், தவெக கொடியை அசைத்த ரசிகரை காவல்துறையினர் கைது செய்துள்ளது.
