பெரம்பலூர், டிச. 28– பெரம் பலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நேற்று (27.12.2025) காலை 11 மணிக்கு மாவட்டச் செயலாளர் மு.விசயேந்திரன் இல்லத்தில் உற்சாகம் பொங்க நடைபெற்றது. மாவட்டத்தலைவர் சி.தங்கராசு தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் இரா.சின்னச்சாமி வரவேற்புரையாற்றினார்.
காப்பாளர் அக்ரி.ந.ஆறுமுகம் மாவட்டச்செயலாளர் மு.விசயேந் திரன், பொதுக்குழு உறுப்பினர் இரா.அரங்கராசன்,நகர தலை வர் அ.ஆதிசிவம், மாவட்ட ப.க. தலைவர், எசனை பெ.நடராசன், கழக வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் மு.சர்புதீன், ஆலத்தூர் ஒன்றியத் தலைவர் வீ.இரவிக்குமார்,பகுத்தறிவாளர் கழக துணைச்செயலாளர் சு.இராமு, வேப்பூர்ஒன்றியதலைவர் நா.அறங்கையா, மாவட்ட அமைப் பாளர் பி.துரைசாமி, வி.கலியமூர்த்தி, ஜெ.அருள்ராசு, த.வின்சென்ட் மாவட்ட இளைஞரணி தலைவர் செ.தமிழரசன், மாவட்ட மாணவர் கழகத்தலைவர் பொ.பிறைநுதல் செல்வன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா நூல்கள் அறிமுக விழா நடத்துவது எனவும், பெரியார் உலகத்திற்கு ரூ.10இலட்சம்நிதிதிரட்டி வழங்குவது எனவும்,தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்வில் சிறப்பாக கழக காப்பாளர் அக்ரி ந.ஆறுமுகம், தனது மரணசாசனத்தை ஒப்ப டைத்து அனைவரும் பின்பற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டு பெரியார் உலகத்திற்கு ரூ.ஆயிரம் வழங்கினார் .
அனைவரும் மரண சாசன நகலினை பெற்றுக்கொண்டார்கள். அனைவருக்கும் நன்றி கூறப்பட்டது.
