அய்யலூர், டிச. 28– திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், அய்யலூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், வடமதுரை கிளை சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
ரயில்வே கேட் அருகில் உள்ள அன்புமலர் வளாகத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு எழுத்தாளர் கவியோவியத்தமிழன் தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் அழகுராஜா வரவேற்றார்.
வடமதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் வீரகடம்பு கோபு, விவசாயச் சங்க மாவட்டத் தலைவர் எம்.கே.சம்சுதீன், வேடசந்தூர் தமுஎகச கிளை செயலாளர் கு.பாலமுருகன், தமுஎகச மாவட்டச் செயலாளர், தாமோதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
‘சீர்திருத்தங்களின் சிகரம் தந்தை பெரியார்’ எனும் தலைப்பில் எழுத்தாளர் கவியோவியத்தமிழன் பெரியாரின் வாழ்வுப் பணிகள், போராட்டங்கள், சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார்.
நிகழ்வில், ரா.அன்பரசன், ‘சன்’ சந்திரசேகர், ஜோதிமணி, நாகஜோதி, மகேஷ்ராஜா, பிளாக்படி செந்தில், முத்துக்கணேசன், ரெங்கராஜ், மாடசாமி, ராபர்ட் கென்னடி, பாடகர் வனசேகரன், வெங்கடாஜலபதி, ரஞ்சித், கிருஷ்ணமூர்த்தி, கணேசன், கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கிளை துணைச் செயலாளர் பூபதிராஜா நன்றி கூறினார்.
