சிறுகனூர், ஏப். 28- திருச்சி சட்டக் கல்லூரி சமயபுரம் எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பு தொடங்கப்பட்டது. சிறுகனூர் பெரியார் உலகத்தில் 27.4.2023 அன்று மாலை 6.00 மணிக்கு திராவிட மாணவர் சந்திப்புக் கூட்டம் திராவிட மாண வர் கழக மாநில அமைப்பாளர் பொறியா ளர் இரா. செந்தூரப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மண்டல தலைவர் ப.ஆல்பர்ட், மண்டல செயலாளர் கரூர் இராசு, இலால்குடி மாவட்ட துணைத் தலைவர் அட்டலிங்கம் ஆகியோர் கருத்துரை வழங்கி மகிழ்ந்தார்கள்.
திராவிடர்கழக தொழிலாளர் அணி மண்டல செயலாளர் வே. அசோகன், திருவானைக்காவல் பகுதி செயலாளர் இரா.முருகன் பா.செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
புதிய பொறுப்பாளர்கள்
திருச்சி சட்டக்கல்லூரி அமைப் பாளர் -ஞா.மதன்
எம்.ஏ.எம் பொறியியல் கல்லூரி
தலைவர் -கா.பிரபஞ்சன், செய லாளர் -நா .தருண், அமைப்பாளர் ஏ. பி .தினேசு குமார்.
ஆகஸ்ட் 5-ஆம் தேதி கோவை யில் நடைபெறும் திராவிட மாணவர் கழக 80ஆவது ஆண்டு மாநில மாநாட்டில் திரளாகச் சென்று பங்கேற்பது எனவும்,
மே திங்களில் சிறுகனூர் பெரியார் உலகத்தில் திராவிட மாணவர் கழகம் சார்பில் பயில ரங்கம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
மாணவர்கள் சந்திப்பு
மாணவர்கள் சந்திப்புக் கூட் டத்தை சிறப்பாக ஒருங்கிணைத்த தனலெட்சுமி சீனிவாசன் பல் கலைக்கழக சட்டமாணவர் ச.திரா விடச் செல்வன், மாணவர் களுக்கு புத்தகங்கள் வழங்கியும், இரவு சிற்றூண்டி அளித்தும் சிறப் பித்த மண்டல தலைவர் ப.ஆல் பர்ட், ப.மார்ட்டின் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.