எனது வாழ்விணையர் திருமதி மோகனா அவர்களது தங்கையும், திரு.ராஜராஜன் அவர்களது அன்னையுமான திருமதி. சூரியா (சம்பந்தம்) அவர்கள் (வயது 80) 25.12.2025 அன்று காலை திருவண்ணாமலை காந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் மறைவுற்றார்.
செய்தி அறிந்து, உடனடியாக இல்லம் வந்து, இறுதி மரியாதை செய்த தமிழ்நாடு அரசின் பொதுப் பணித் துறை அமைச்சர் மாண்புமிகு எ.வ.வேலு அவர்களுக்கும், தமிழ்நாடு அரசின் சட்டப் பேரவைத் துணைத் தலைவர் மாண்புமிகு கு.பிச்சாண்டி அவர்களுக்கும், தி.மு.க. மருத்துவரணி மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் மற்றும் உள்ளூர் தி.மு.க. முக்கிய பொறுப்பாளர்களுக்கும்,
இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட திராவிடர் கழகத்தின் முக்கிய பொறுப்பாளர்களான தோழர்களுக்கும், பிரமுகர்களுக்கும், அனைத்துக் கட்சித் தோழர்களுக்கும், நேரில் வந்தும், தொலைப்பேசியில் ஆறுதல் கூறி, அனுதாபம் சொன்னவர்களுக்கும், தோழர்கள், பெருமக்கள், வெளிநாடு, வெளியூர் தோழர்களுக்கும், நண்பர்களுக்கும், எங்களுக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் எங்களது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி – மோகனா
எஸ்.ராஜராஜன் – தமிழ்ச்செல்வி
27.12.2025 மற்றும் குடும்பத்தினர்.
