மனிதநேயமும், பகுத்தறிவும், அறிவியலும் சேர்ந்த கூட்டணி வெற்றி இதோ!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மூளைச்சாவு அடைந்தவரின் இதயம்
சென்னைக்கு ெஹலிகாப்டரில் வந்தது

5 பேர் மறுவாழ்வு பெற்றனர்

‘‘தஞ்சை, டிச.27- மூளைச்சாவு அடைந்தவரின் இதயம், ஹெலி காப்டர் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

மூளைச்சாவு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் வசந்த் (வயது 25). இவர் கடந்த 23-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண் டிருந்தார்.

சுவாமிமலை பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்களின் கண்காணிப் பில் இருந்த வசந்த் நேற்று (26.12.2025) மூளைச்சாவு அடைந்தார்.

உடல் உறுப்புகள் தானம்

இந்த நிலையில் சண்முகம் மற்றும் குடும்பத் தினர் வசந்த் உடல் உறுப்புகளை தானம் அளிக்க ஒப்புதல் அளித்தனர். அதன்படி வசந்த் உடலில் இருந்த இதயம், கல்லீரல், சிறு நீரகங்கள், கருவிழிகள் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

பின்னர் இதயம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும். ஒரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கும், மற்றொரு சிறுநீரகம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கும், கல்லீரல் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கும், கருவிழிகள் தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கும் தானமாக வழங்கப்பட்டது.

சென்னைக்கு ஹெலிகாப்டரில் பறந்த இதயம்

மூளைச்சாவு அடைந்த வாலிபரிடம் இருந்து பெறப் பட்ட இதயம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து திருச்சிக்கு ஆம்பு லன்ஸ் மூலம் போலீஸ் உதவியுடன் சென்னைக்கு உடன்கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் திருச்சியில் இருந்துஹெலிகாப்டர் மூலம் இதயம் கொண்டு செல்லப்பட்டது.

சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு கல்லூரியில் இறங்கிய ஹெலிகாப்டரில் இருந்து சென்னை போலீசார் உதவியுடன் 3 நிமிடங்களில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு டாக்டர்கள் குழுவினர்,  இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 33 வயதான நோயாளிக்கு பொருத்தினர். முதன் முதலாக சென்னை மாநகர எல்லைக்குள் ஒரு ஹெலி காப்டர் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது.’’

– செய்தி

நண்பர்களே, மேலே காட்டியுள்ள செய்தி எவ்வளவு உயர்ந்த மனிதநேயமும், கருணையும் கலந்த  ஈகையின் உச்சம் – பார்த்தீர்களா?

கும்பகோணத்தில் வாழும் திரு. சண்முகம் அவர்களது மகன் வசந்த் – 19 வயது இளைஞர் – மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட விபத்தினால், சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது குடும்பத்தினர் மனிதநேயத்தின் அடிப்படையில் அவரது உடல் உறுப்புகளைக் கொடையாகக் கொடுக்க முன் வந்ததின் காரணமாக மனித நேயத்தில் உயர்ந்த குடும்பமாகி விட்டனர்.

வசந்த் மறையாமல் உலகில் மீண்டும் புது வாழ்வு பெற்றுள்ளார் – மந்திர வித்தைகளால் அல்ல, மருத்துவம்  + மனிதநேயம், பகுத்தறிவின் காரணமாக சடங்கு, சம்பிரதாயம் என்று யோசிப்பதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அவரது பெற்றோர் – குடும்பத்தினர் மனமுவந்து வசந்த்தினுடைய   உடல் உறுப்புகளைக் கொடை அளித்ததின் மூலம் 5 பேர் மறு வாழ்வு பெற்று இந்தபூமியில் உலவுவர் என்பது எவ்வளவு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தரக் கூடியது.

வசந்த் உடலிலிருந்த இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கருவிழிகள் ஆகியவை  அறுவைச் சிகிச்சை மூலம்  அகற்றப்பட்டு, உடனே ெஹலிகாப்டர் மூலம் இதயம் சென்னை தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம், மதுரை மருத்துவக் கல்லூரிக்கும், மற்றொரு சிறுநீரகம் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கும், கல்லீரல் திருநெல்வேலி (தனியார்) மருத்துவக்கல்லூரிக்கும், கருவிழிகள், தஞ்சை ராசாமிராசுதார் மருத்துவ மனைக்கும் கொடையாகப் பகுத்தறிவுடன் வழங்கப்பட்டன.

மூளைச்சாவு அடைந்தவரின் இதயத்தை எடுத்தவுடன் ெஹலிகாப்டரில் பறந்து சென்னைக்குக் கொண்டு வந்து பொருத்தப்பட்டது.

ஆக, அய்வர் மீண்டும் புதுவாழ்வு பெற்றனர் என்பதைவிட ஈகைக்கு என்ன உதாரணம் வேண்டும்?

அறிவியல் வளர்ச்சியின் வெற்றியும், பகுத்தறி வோடு பெற்றோர் அளித்த ஒப்புதலும் எவ்வளவு போற்றத்தகுந்தவை!

பெற்றோர்கள், மருத்துவர்கள், அரசு உதவி, காவல்துறை, ெஹலிகாப்டர் உறுப்புப் பயணம் எல்லாம் எவ்வளவு சிறப்பு!

‘‘செத்தும் வாழும் செம்மலாக வசந்த் வாழுகிறார்!’’

புதிதாக அய்வருக்கும் வாழ்வு தந்த இவரின் வள்ளல் தன்மையை போற்றி வாழ்த்துவோம். இப்பணியில்  ஈடுபட்ட அனைவருக்கும் நமது வாழ்த்துகள்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *