அய்யப்பன் பிறப்பும் – கட்டுக்கதைகளும்!

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அய்யப்பன் பிறப்பும் – கட்டுக்கதைகளும்!

அய்யப்பன் பிறப்பும்  கட்டுக்கதைகளும்  என்ற தலைப்பில் மஞ்சை வசந்தன் அவர்கள் கூறிய கருத்துக்களை பகுதி  1 இல் வெளியாகி இருக்கிறது.

அய்யப்பன் மக்களை தற்காலத்தில் பரவலாக பேசப்படுகிற ஈற்கின்ற ஒரு கடவுளாக காண முடிகிறது. திரைப்படத்துறையில் காலத்திற்கு காலம் தியாகராஜ பாகவதர், எம்ஜிஆர், சிவாஜி, கமலஹாசன், விஜய், சூர்யா இப்படி வரிசையாக பிரபலமாக ஆவது போல காசி விஸ்வநாதர், திருப்பதி வெங்கடேச பெருமாள் வரிசையில் இப்போது அய்யப்பன் பிரபலமாக இருக்கிறார்.

காசிக்கு போவதை புண்ணியம், அங்கே இறந்து போவதை முக்தி என்று நம்ப வைத்து தங்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளுக்கு விசுவநாதன் என்று பெயர் வைப்பது வழக்கமாக இருந்தது. பின்னர் திருப்பதி பிரபலமாக உருவாகி பாலாஜி, திருப்பதி, ஏழுமலை என்று பெயர் வைக்க ஆரம்பித்தார்கள். அந்த வரிசையில் இப்போது அய்யப்பனும் சேர்ந்துள்ளார். இதெல்லாம் வியாபார யுக்தி என்றுதான் கூற வேண்டும்.

அத்திவரதர் கூட சமீபத்தில் பிரபலமானது எல்லோருக்கும் தெரியும். இந்த அய்யப்ப பக்தி அய்ப்பசி, கார்த்திகை, தை மாதங்களில் உச்சபட்ச நிலையை அடைகிறது. அறிவுக்கு ஒவ்வாத விசயங்களை உற்பத்தி செய்வது அதை நம்ப வைப்பது வழக்கமாக ஆகி வருகிறது. சிவனின் மனைவி பார்வதியின் உடலில் இருந்து அழுக்காக பிறப்பிக்கப்பட்டவர் தான் பிள்ளையார். தற்போது அந்த அழுக்கு உருண்டைப் பிள்ளையார் மாட்டுச் சாணத்தில் கையால் பிடிக்கப்பட்டு ஒரு அருகம்புல்லை சொருகி வைத்து பிள்ளையார் என்று நம்புகிறார்கள்.

பத்மாசூரன் என்ற அரக்கன் சிவனை நோக்கி தவம் இருந்து தான் யார் தலைவர்கள் கை வைத்தாலும் அவன் சாம்பலாக வேண்டும் என்று வரம்  வாங்கி விடுகிறான். அந்த வரத்தை சோதனை செய்ய வரம் அளித்த சிவனின் தலையிலேயே கை வைத்து பார்க்க நினைக்கிறான். வரத்தை முன்னறிவு இல்லாமல் கொடுத்த சிவன் பயந்து ஓடுகிறார்.

வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைப்பதா என்ற பழமொழியும் இப்படித்தான் உருவானது போல. இதைக் கண்ட சிவனின் மைத்துனர் திருமால், மோகினி போன்று அழகிய பெண் அவதாரம் எடுத்து  பத்மாசூரன் அரக்கனை மயக்குகிறார். தன்னை தொட வேண்டும் என்றால் நீ தலைக்கு குளித்துவிட்டு வா என்று மோகினி சொன்னவுடன் தண்ணீர் கிடைக்காமல் பாதையில் மாட்டின் குளம்பு அளவு இருந்த தண்ணீரை கையால் எடுத்து தலையில் வைத்து குளிக்க முயன்ற போது அவன் வாங்கிய வரமே பத்மாசூரனை சாம்பலாக்கி விடுகிறது.

அரக்கன் இடமிருந்து தப்பித்த சிவனின் பார்வை மோகினியின் அழகில் மயங்கி அவளை அடைய துரத்துகிறார். மோகினி உருவம் கொண்ட திருமாலும் மைத்துனரே! நான் பெண்ணல்ல!! என்று சிவனிடம் சொன்னாலும் அவர் கேட்பதாக, விடுவதாக இல்லை. எப்படியும் மோகினி அய் அடைய நினைத்து துரத்தி அவளுடைய கையைப் பிடிக்கும்போது இருவர் கைகளுக்கு இடையே குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தைதான் அய்யப்பன். சிவனுக்கும் திருமாலுக்கும் உருவானதால் ஹரிஹர புத்திரன் என்றும் அய்யப்பன் அழைக்கப்படுகிறார்.

இது அறிவுக்கு உகந்ததா என்பதை சிந்திப்பதில்லை. ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறக்குமா என்று யோசிப்பதில்லை. மோடியும் அதிபர் டிரம்பும் கை குலுக்கி கொண்டால் குழந்தை பிறக்குமா என்று பகுத்தறிவு கொண்டு நினைப்பதில்லை.

இப்படிப்பட்ட கடவுளை எப்படி நினைப்பது, எப்படி நம்புவது? இதை பரப்பும் முட்டாள்தனமான புராணங்களை எப்படி நம்புவது? என்று மஞ்சை வசந்தன் தெரிவித்த கருத்துகள் Periyar Vision OTT–இல் வெளியாகி இருக்கிறது. இதன் தொடர்ச்சிகளும் வெளியாகி வருகிறது. பாருங்கள் : சிந்தனை செய்யுங்கள்.

– நா. சுப்பையா

பரமத்தி வேலூர்

பெரியார் ஒடிடி செய்திகள்

Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.

சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!

உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்!          இணைப்பு :  periyarvision.com

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *