சென்னை, டிச. 27- நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா (Bank of India), தற்போது நாடு முழுவதும் உள்ள அதன் கிளைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்கள் வருமாறு: இந்த புதிய அறிவிப்பின்படி, மொத்தம் 514 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ‘கிரெடிட் ஆபீசர்’ (Credit Officer) பதவிக்கு இந்த ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது.
கல்வி மற்றும் வயது தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பணி அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.
வயது வரம்பு: (01.11.2025 அன்றைய தேதிப்படி) பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடுகிறது. 25 முதல் 35 வயது வரை 28 முதல் 38 வயது வரை 30 முதல் 40 வயது வரை அரசு விதிமுறைகளின்படி, ஓ.பி.சி மற்றும் எஸ்.சி./எஸ்.டி பிரிவினருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும். தகுதியான விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்: இணையவழி தேர்வு (Online Test) நேர்காணலுக்கான பட்டியல் தயாரித்தல் (Shortlist)
தேர்வு மய்ங்கள்: தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோவை ஆகிய நகரங்களில் தேர்வுகள் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 5-1-2026 அன்றைய தேதிக்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விரிவான தகவல்களை தெரிந்துகொள்ள https://bankofindia.bank.in/career/recruitment-notice என்ற வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைப் பார்க்கலாம்.
