பெரியார் பாலிடெக்னிக்கில் நான் முதல்வன் திட்டத்தின் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சி

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வல்லம், டிச. 27- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி யில் “நான் முதல்வன் திட்ட”த்தின் கீழ் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சி 15.12.2025 முதல் 20.12. 2025 வரை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் சிறப்பான திட்டங்களில் ஒன்றான “நான் முதல் வன் திட்ட”த்தின் கீழ் தமிழ்நாடு கல்லூரி மாணவ, மாணவிகளை சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் உலகத்திலுள்ள எந்த மாணவர்களை விடவும் திறன்மிக்கவர்களாகவும் மேம்படுத்த பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் பயிற்றுவிக்கப்படுகிறது.

மேலும் இப்பாலிடெக் னிக்கில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பல் வேறு தலைப்புகளில் “ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சிகள்” ஒவ்வொரு பருவமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

2025-2026ஆம் கல்வி யாண்டில் அய்.ஒ.டி. & சென்சார் இன்டக்ரேசன் (IoT & Sensor Integration) என்ற தலைப்பில் 15.12.2025 முதல் 20.12.2025 வரை நடைபெற்ற ஆசிரி யர்களுக்கான Faculty Development Programme(FDP) எனப்படும் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சியின் துவக்கவிழா அன்று காலை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் அரங்கில் நடைபெற்றது.

இக்கல்லூரியில் ஆறு நாட்கள் நடை பெற்ற ஆசிரியர் மேம் பாட்டு பயிற்சியை இப்பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி துவக்கி வைத்தார். இக்கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர். க.ரோஜா வாழ்த்துரை வழங்கினார்.

சென்னை இன்கேஜ் டெக்னாலாஜிஸ் (Ingage Technologies, Chennai) என்ற நிறுவனத்தின் பொறியாளர் பேராசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார்.  அவர் அய்ஓடி & சென்சார் இன்டக்ரேசன் (IoT & Sensor Integration)ல் தற்போதைய வளர்ச்சிகளான Arduino AVR Boards, Arduino ESP 32 Boards, Arduino IDE, Web Dashboard Creation, Thinkspeak, Blynk, Adafruit united senors, Nodered ஆகிய தலைப்புகளில் விரிவான விளக்கமும், Arduino Hardware, Sensors மற்றும் Simulation எனப்படும் கம்யூட்டர்-ல் Handson பயிற்சியும் பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

இப்பயிற்சியில் பல் வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளிலிருந்து 15 பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

இக்கல்லூரியின் நான் முதல்வன் திட்டத்தின் பொறுப்பாளர் எஸ்பிஓசி (SPOC) ஆர்.அய்யநாதன் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தை ஒருங் கிணைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *