மோடியின் ஆஸ்திரேலியப் பயணத்தின் போது மோடி மற்றும் அவரோடு வருபவர்களுக்கு அனைத்துவசதிகளையும் செய்து கொடுக்கும் முக்கியமான பணியை பா.ஜ.க. வெளிநாடு வாழ் நண்பர் களின் மேனாள் தலைவர் பலேஷ் தன்கர் மேற்கொண்டார், இதற்காக இவரை மோடி நேரில் சந்தித்து பாராட் டியுள்ளார். மேலும் மோடியின் இரண்டாவது நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் பிரமாண்டமாக கொண்டாடிய இவர் இதற்காக பல கோடி டாலர்களை வசூலித்துள்ளார் என்று சமூகவலைதளப்பதிவுகளில் சான்றுகளோடு தகவல் வெளியாகி உள்ளது. இவருக்கு எதிரான 39 பாலியல் குற்றச்சாட்டுகளில் பலேஷ் தன்கரை குற்றவாளி என்று ஆஸ்திரேலிய நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.