டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்துமஸ் விழாவில் சங்கிகள் வன்முறைக்கு சி.எஸ்.அய். கிறிஸ்தவ அமைப்புகள் கடும் கண்டனம். அரசுகள் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தல்.
* “திராவிட மாடல் ஆட்சி இருக்கும் வரை மதவெறி ஆட்டத்திற்கு இடம் கிடையாது.இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் தனிக்காட்டு ராஜா” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் ‘மதவெறி கும்பலுக்கு பயப்படாமல் வாழும் அமைதியான சூழல் ஏற்படுத்தி உள்ளோம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சத்தீஸ்கரில் ஹிந்துத்வா அமைப்பினர் கலவரம்: கிறிஸ்தவ வழக்கப்படி மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு. சத்தீஸ்கர் குடும்பம் இந்து மதத்திற்கு ‘மறுமதம்’ மாற கட்டாயப்படுத்தப்பட்டனர்.
* 2026ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஜனவரி 20ஆம் தேதி கூடுகிறது: ஆளுநர் ரவி உரையாற்றுகிறார்; சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தி ஹிந்து:
* மேனாள் பிரசார் பாரதி தலைவருக்கு ரூ.112 கோடி லஞ்சம்: சமீபத்திய ஊடக அறிக்கை மற்றும் வருமான வரி இயக்குநரகத்தின் (விசாரணை) 254 பக்க ரகசிய ஆவணம் ஒன்றை குறிப்பிட்டு, 2019-2020 மற்றும் 2021-2022-க்கு இடையில் உத்தரப் பிரதேச அரசாங்கத் திட்டங்களிலிருந்து கிட்டத்தட்ட ரூ.112 கோடியை முறைகேடாக பெற்ற ஒரு லஞ்ச வலையமைப்பால் மேனாள் பிரச்சார் பாரதி தலைவர் நவ்நீத் குமார் சேகல் தான் மிகப்பெரிய பயனாளியாக இருந்தார் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் மவுனத்தை அந்தக் கட்சி கேள்வி எழுப்பியது.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ‘தேவையை அடிப்படையாகக் கொண்டது’ என்றும், புதிய சட்டம் ‘வழங்கலை அடிப்படையாகக் கொண்டது’ என்றும் குறிப்பிட்டிகிறார்; புதிய விபி-ஜி ராம் ஜி சட்டம் ஏழைப் பிரிவினரை மோசமாகப் பாதிக்கும் என ப.சிதம்பரம் கண்டனம்.
தி டெலிகிராப்:
* உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்காரின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதற்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் உட்பட ஏராளமான போராட்டக்காரர்கள் நேற்று (டிச.26) டில்லி உயர் நீதிமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாஜி பாஜக சட்டமன்ற உறுப்பினர் தண்டனை ரத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பில் மனு தாக்கல்.
– குடந்தை கருணா
