எளிமையின் ஏந்தல், தோழர் ஆர்.என்.கே. என்று அனைவராலும் அன்புடனும், மரியாதையோடும் அழைக்கப்படும் பொதுவுடைமை மாவீரர், தகைசால் தமிழர் தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களது 101ஆவது பிறந்த நாளில் அவரை திராவிடர் கழகம் வாழ்த்தி மகிழ்கிறது!
எடுத்துக்காட்டான கொள்கைப் போராளி தோழர் ஆர்.என்.கே. அவர்கள், நல்ல உடல் நலத்துடன் மேலும் பல்லாண்டு வாழ்ந்து, தூய தொண்டறத்திற்கு வழிகாட்டிட வேண்டுமென விழைகிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
27.12.2025
