சமீபகாலமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இதன் எண்ணிக்கை உயர்ந்த இடத்தில் உள்ளது. இந்தியாவின் 36 மாநிலங்களிலும் நடத்தப்பட்ட உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் தமிழ்நாட்டின் பங்கு 24 சதவிகிதமாக இருக்கிறது. அதாவது இவ்வகை சிகிச்சையில் நான்கில் ஒரு பங்கு தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மொத்தம் 2,286 கொடையாளர்களிடம் இருந்து 13,400 உறுப்புகள் கொடையாகப் பெறப்பட்டு பயனாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன. இதில் 4,036 கிட்னிகள், 2,036 கல்லீரல்கள், 1,089 இதய வால்வுகள், 979 இதயங்கள், 1,010 நுரையீரல்கள் உள்ளிட்டவை அடங்கும்.
உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள், மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்துகூட உறுப்புகளைக் கொடையாகப் பெறவில்லை என்பதால், அவை இரண்டும் இந்தப் பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளன.
நன்றி: ‘ராணி’, 14.12.2025
