வடசென்னை ஓட்டேரி பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் எழுச்சி உரை!

7 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஓட்டுத் திருட்டு மூலம் ஆட்சித் திருட்டை நடத்த எண்ணுகிறார்கள்!
தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் மறுபடியும் வெற்றி பெறும்!

சென்னை, டிச.27 ஓட்டுத் திருட்டு மூலம் ஆட்சித் திருட்டை நடத்த எண்ணுகிறார்கள்! தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் மறுபடியும் வெற்றி பெறும் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’ எனும் தலைப்பிலான பரப்புரை தொடர் பயணம் – ‘‘பெரியார் உலகம் நிதி அளிப்பு விழா!’’ ஆகிய இரு பெரும் நிகழ்ச்சிகள் வடசென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில், 26.12.2025 அன்று மாலை 6 மணியளவில், வெங்கடம்மாள் சமாதி தெரு பிரிக்களின் சாலையில், பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சுயமரியாதைச் சுடரொளி ஓட்டேரி கி.வெங்கடேசன் அவர்களின் நினைவாக மேடை அமைக்கப்பட்டு இருந்தது.

வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் தலைமையில் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஓட்டேரி ந.கார்த்திக் அனைவரையும் வரவேற்று சிறப்பித்தார். திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தே. செ.கோபால், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ்,  பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், மாவட்டத் துணைத் தலைவர் நா.பார்த்திபன், மாவட்ட காப்பாளர் கி. இராமலிங்கம், மாவட்ட அமைப்பாளர் சி.பாசுகர், பொதுக்குழு உறுப்பினர் தங்க.தனலட்சுமி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் த.மரகதமணி, மாவட்ட மகளிரணித் தோழர் ஓட்டேரி இளவரசி, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் பா.பார்த்திபன், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ச.சஞ்சய் மற்றும் தோழர் புரசை பாலமுருகன் ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தார்கள். ஊடகவியலாளர் த.பர்தீன் இணைப்புரை வழங்கினார். வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர் மு.வந்தியத்தேவன், திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரை ஞர் சே.மெ.மதிவதனி ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். நிகழ்விடத்தைச் சுற்றி கழகக் கொடிகளும், பதாகைகளும் அமைக்கப்பட்டிருந்தன. கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இரவு 8 மணி அளவில் வருகை தந்தார்கள். மாவட்டக் கழகத்தின் சார்பில், எழுச்சிகரமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை

தொடர்ந்து, ‘‘பெரியார் உலகம்’’ நன்கொடை அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. ஓட்டேரி பகுதி யின் அடி நாள்  பெரியார் தொண்டர் சிட்டிபாபு உள்ளிட்டோர் தமது குடும்பத்துடன் பெரியார் உலகம் நிதி வழங்கினர்.  இந்நிகழ்வை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் ஒருங்கிணைத்தார். வட சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில், ரூபாய் 8,62,500/- வழங்கியுள்ளதாகவும், விரைவில் 10 லட்சம் இலக்கை எட்டுவோம் என்றும், அதையும் தாண்டி மாவட்டத்தின் இலக்காக 30 லட்சத்தை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறோம். அதையும் விரைந்து முடிப்போம் என்றும் வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் அறிவிப்பு செய்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

நிறைவாக இரவு 8.30 மணிக்கு கழகத் தலைவர் உரையாற்றினார்.

‘‘மறைமலை நகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு மாநாட்டில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியத்தை பெரியார் உலகத்துக்கு வழங்குவோம் என்று அறிவித்து, அதன்படியே வழங்கினார்கள். அதன் தத்துவம் என்ன வென்றால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதிகள் பெரியார் உலகத்துக்கு நன்கொடை வழங்கி இருக்கிறார்கள். மக்களின் பங்களிப்போடுதான் பெரியார் உலகம் உருவாகி வருகிறது. திமுக மட்டுமல்ல, கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்ல, கட்சிகளுக்கு அப்பாற்பட்டும் மக்கள் நன்கொடை வழங்கி வருகிறார்கள். இதுதான் பா.ஜ.க. தமிழ் நாட்டில் காலூன்றவே முடியாது என்பதைக் குறிக்கிறது’’ என்று பலத்த கைதட்டல்களுக்கு இடையே தமது உரையை எழுச்சிகரமாகத் தொடங்கினார். தொடர்ந்து அவர், நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள மாவட்டக் கழகத்தின் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியனைப் பற்றி குறிப்பிட்டார். அப்போது, ‘‘தளபதி பாண்டியன் தனக்கு பெயரன் முறையாகிறது” என்று சொல்லிவிட்டு, ”அவர் பேரன் என்றால் என்னை தாத்தாவாக நினைத்துக் கொள்ளாதீர்கள். இன்றைக்கும் நான் இளை ஞர் தான்” என்று உற்சாகம் கொப்பளிக்கப் பேசி, மக்களையும் உற்சாகம் கொள்ள வைத்தார். மேலும் அவர், நிகழ்ச்சிக்கான தலைப்பைச் சுட்டிக்காட்டி,
ஆர்.எஸ்.எஸ்.அய் சுருக்க மாக புரிந்து கொள்ள, ‘‘காந்தியை சுட்டுக்கொன்ற மராத்திய பார்ப்பனர் கோட்சேவுக்கு பயிற்சி கொடுத்தது ஆர்.எஸ்.எஸ்.தான்” என்றும், ‘‘காந்தியை மட்டுமல்ல காந்தி என்ற பெயரையே ஒழித்து விட வேண்டும் என்றுதான், ஏழ்மையை; வறுமையை; பட்டினியைப் போக்கும் திட்டமான, ’மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை’ ஒன்றிய பா.ஜ.க. அரசு சீர்குலைத்திருப்பதை   சுட்டிக்காட்டி, அதன் விளைவாக மாநில உரிமை பறிப்பு, ஹிந்தி – சமஸ்கிருதத் திணிப்பு உள்ளிட்ட அவலங்களையும் விவரித்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘‘பன் மதங்கள்; பல கலாச்சாரங்கள் உள்ள இந்தியாவில் என் மதம்தான் – இந்து மதம் தான் முக்கியம் என்று சொல்வதுதான் ஆர்.எஸ்.எஸ்.’’ என்றெல்லாம் சொல்லி, இதுதான் ‘ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி’ என்று உரத்துச் சொல்லி தலைப்பை நினைவு படுத்தினார்.

தொடர்ந்து அவர், காந்தி படுகொலை செய்யப்பட்ட தற்கான மூல காரணங்களை நினைவூட்டி பேசினார். அதற்காக தமிழ்நாட்டில் 1948 இல், முதலமைச்சராக இருந்த ஒழுக்க சீலர் ஓமந்தூர் ராமசாமி பற்றி, தடி, தாடி இல்லாத ராமசாமியாக செயல்படுகிறார் என்று பார்ப்பனர்கள் காந்தியிடம் புகார் கூறியதையும், பின்னர் காந்தி, ஓமந்தூரார் அவர்களை அழைத்து பேசியதையும்,  ஓமந்தூரார் தன் தரப்பின் நியா யங்களை புள்ளி விவரங்களுடன் பார்ப்பனர்களை அம்பலப்படுத்தியதையும், அதைத்தொடர்ந்து பார்ப்பனர்களின் புகாரை காந்தி புறம் தள்ளியதையும் சுட்டிக்காட்டி பேசினார். அதற்குப் பிறகுதான் ‘இனிமேல் காந்தியை விட்டு வைக்க கூடாது என்று அவர்கள் முடிவுக்கு வந்தனர்’ என்றும் அம்பலப்படுத்தினார். மேலும் அவர்,  ‘‘தமிழ்நாட்டில் பல்வேறு நெருக்கடிகள் கொடுத்த பின்னரும் ஒன்றிய அரசு எண்ணியது நிறைவேறாமல் போகவே, ”ஓட்டுத் திருட்டு மூலம் ஆட்சித் திருட்டை நடத்த எண்ணுகிறார்கள்?” என்று கடுமையாக குற்றம் சாட்டி, “தமிழ்நாட்டில் திராவிடர் மாடல் ஆட்சிதான் மறுபடியும் வெற்றி பெறும்!” என்று பலத்த கைதட்டல்களுக்கிடையே குறிப்பிட்டார். மேலும் அவர், ‘‘இந்தியா இந்து நாடு – இதை ஏற்க அரசியலமைப்புச் சட்டம் ஒப்புதல் தேவையில்லை’’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சட்டவிரோதமாகக் கூறியதை ஒரு நாளேட்டில் வந்த செய்தியை படித்துக் காட்டி, எப்படிப்பட்ட ஆபத்து நம்மை சூழ்ந்து இருக்கிறது என்பதை புரிய
வைத்தார்.

தொடர்ந்து அவர் திரா விடர் இயக்கம் பெண்ணு ரிமை களத்தில் செய்த மகத்தான புரட்சியை சுட்டிக்காட்ட 1929 செங்கல்பட்டு மாநாட்டில் இருந்து இன்றைய ‘திராவிட மாடல்’ அரசு வரை யிலான திட்டங்களை; சட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார். அதில் பெண்களுக்கு சொத்து ரிமை என்பது 1989இல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டில் சட்டமாகவும், பின்னர் 2005 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் சட்ட மாக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டி, ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது மேலோட்டமாக நடப்பது அல்ல, ஆழமாக சமுதா யத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது என்பதைப் புரிய வைத்து, ‘‘ஆகவே தான் சொல்கிறோம் தமிழ்நாடு பெரியார் மண்தான்!’’ ஜாதி ஒழிப்பு மண்தான்! சமூக நீதி மண்தான்! என்று உரத்துச் சொன்னார். அதைத்தொடர்ந்து, ‘‘இதுதான் திராவிடம் – இதுதான் திராவிட மாடல் ஆட்சி’’ என்று கூறி, நிகழ்ச்சிக்கான தலைப்பை நினைவு படுத்தினார். தனது உரையின் இறுதியாக, ‘‘திராவிட மாடல் ஆட்சி தான் மறுபடியும் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் சொல்வது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக அல்ல; எங்களுக்காக அல்ல; மேடையில் உட்கார்ந்து இருக்கும் இந்தியா கூட்டணி கட்சிகளுக்காக அல்ல; உங்களுக்காக; உங்கள் பேரப்பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக’’ என்று பலத்த கைதட்டலுக்கு இடையே கூறி, உரையை நிறைவு செய்தார்.

மாவட்டக் கழகத்தின் சார்பில் கழகத் தலைவருக்கு மரியாதை செய்யப்பட்டது.‌ தொடர்ந்து அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு ஆசிரியர் புறப்பட்டார்.

பங்கேற்றோர்

நிறைவாக ஓட்டேரி தோழர் மு.சேகர் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். திரு.வி.க.நகர் தெற்கு பகுதி தி.மு.க. செயலாளர் எம்.சாமிகண்ணு, 76 ஆவது வட்ட தி.மு.க. செயலாளர் ச.சசிகுமார், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. விவசாய அணி செயலாளர் இரா.வீரமணி,  பெரியார் பெருந்தொண்டர்  கோ.தங்கமணி, அயன்புரம் துரைராஜ், புது வண்ணை மணிவண்ணன் குடும்பத்தினர், ஓட்டேரி பாஸ்கர் குடும்பத்தினர், ஓட்டேரி மு.சேகர் குடும்பத்தினர், ஆவடி வை.கலையரசன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன்,  ஆவடி மாவட்ட செயலாளர் க.இளவரசன், தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை, க.கலைமணி, வழக்குரைஞர் துரை.அருண், உடுமலை வடிவேல், ஊடகவியலாளர் முரளிகிருஷ்ணன், எருக்கமாநகர் சொ.அன்பு, வ.தமிழ்ச்செல்வன், சின்ன துரை, கடலூர் கேசவனின் பெயரன் கர்ணா பாண்டியன், அரும்பாக்கம் சா.தாமோதரன், சி.இனியன், பிரபாகர், மெகபூப், கொளத்தூர் ச.இராசேந்திரன், திராவிடச்செல்வன், ஓட்டேரி வெ.நல்லதம்பி, ஓட்டேரி இரா.எம்ரோசு, பண்ணைபுரம் யுகேஷ் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் பொதுமக்கள் அனைத்து கட்சிகளையும் சார்ந்த பெருமக்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *